Sunday, June 7, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

போர்ட் டிக்சன் மாவட்ட இந்து ஆலய மற்றும் சமூக பிரதிநிதிகளுடன் சந்திப்பு!

போர்ட் டிக்சன் மாவட்டத்தில் உள்ள இந்து ஆலய நிர்வாகம் மற்றும் இந்திய சமூக பிரதிநிதிகளுடன் தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பில் ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ராஜசேகரனும் கலந்து கொண்டார்.
ஆலயங்கள் வழிபாட்டுத் தளங்களாக மட்டுமின்றி, உள்ளூர் சமூகங்களுக்கு ஒரு உருமாற்று மையமாக விளங்க வேண்டும் என சரஸ்வதி வலியுறுத்தினார்.
இந்த தளங்களில் கல்வி, சமூக நலன், ஒற்றுமை மற்றும் இளைய தலைமுறையினரின் மேம்பாடுகள் குறித்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பில் கலந்து கொண்ட 20 ஆலய நிர்வாக பிரதிநிதிகள் தாங்கள் எதிர் நோக்கும் நிர்வாக பிரச்சனைகள், வசதி குறைவு மற்றும் சமூக ஒத்துழைப்பு போன்ற பிரச்சனைகள் குறித்து எடுத்து விளக்கினர்.
ஆலயங்கள், சமூக தலைவர்கள் மற்றும் அரசாங்கம் ஆகிய தரப்பினரின் கூட்டு ஒத்துழைப்பின் வழி சமூகத்திற்கு ஆலயங்களின் பங்களிப்பை வலுப்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு மிக அவசியம் என அவர் கேட்டுக்கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular