Thursday, April 16, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

காஸா மக்களுக்கான எழுச்சிப் பேரணி: இது ஒரு தொடக்கம் தான்!

நேற்று தலைநகரில் நடந்த காஸா மக்களுக்கான எழுச்சிப் பேரணி ஒரு தொடக்கம் தான் என பாஸ் ஆதரவு பேரவையின் திரெங்கானு மாநில தலைவர் டாக்டர் பாலச்சந்திரன் கோபாலகிருஷ்ணன் கூறினார்.
பாலஸ்தீனர்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் அடக்கு முறையை மலேசியர்கள் இனியும் சகித்துக் கொள்ள மாட்டார்கள் என்பதை இந்த பேரணி உணர்த்திவிட்டதாக அவர் கூறினார்.
கொட்டிய மழையிலும் நனைந்த போதிலும் ஆயிரக்கணக்கான காஸா மக்களுக்காக தங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தியதாக அவர் சுட்டிக் காட்டினார்.
நாங்கள் இனியும் அமைதியாக இருந்து விடமாட்டோம் என்ற நிலைப்பாட்டை ஆயிரக்கணக்கானோர் இந்த பேரணியில் உணர்த்திவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த பேரணியை ஏற்பாடு செய்த ஏற்பாட்டுக் குழுவினர், தொண்டூழியர்கள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் அனைவருக்கும் இவ்வேளியில் தாம் நன்றி கூறிக்கொள்வதாக அவர் சொன்னார்.


இந்த பேரணி இந்த இடத்திலே நின்று விடாது. இது ஒரு தொடக்கம்தான். நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருவோம் என அவர் தெரிவித்தார்.
காஸா மண்ணில் ரத்தம் சிந்தும் வரை இந்த போராட்டம் தொடரும் என அவர் தெரிவித்தார்.
பாலஸ்தீனியர்களுக்கு எதிராக நடத்தப்படும் கொடுமைகளை அனைத்துலக நாடுகள் கண்டிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
பாலஸ்தீனியர்கள் விவகாரத்தில் மலேசியர்கள் ஒருமித்துக் குரலுடன் செயல்படுகிறார்கள் என்பதை இந்த பேரணி நிரூபித்து விட்டதாக அவர் சொன்னார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular