
காஸா மக்களுக்காக நாளை தலைநகரில் நடத்தப்படும் எழுச்சிப் பேரணியில் முஸ்லிம் அல்லாதவர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என திரங்கானு இந்து சமய மன்றத்தின் ஆலோசகர் டாக்டர் பாலச்சந்திரன் கோபாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.
பாலஸ்தீனியர மக்களுக்கு எதிரான அடக்கு முறையை கண்டித்து நடத்தப்படும் இந்த பேரணியில் அனைத்து மலேசியர்களும் கலந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.
காஸா பிரச்சனை மனிதாபிமான விவகாரம் என்பதால் இந்த விவகாரத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றார் அவர்.
காஸா மக்களுக்காக நடத்தப்படும் இந்த எழுச்சி பேரணி சமயத்தையும் மதத்தையும் கடந்த ஒன்று என்பதால் இந்த விவகாரத்தில் ஒருமித்த குரலுடன் நாம் அனைவரும் செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
காஸா மக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை மற்றும் கொடுமையை கண்டு நாம் இனியும் அமைதியாக இருந்துவிடக் கூடாது.
ஆகையால் இந்த விவகாரத்தில் அனைத்தும் மலேசியர்களும் ஒன்று திரண்டு தங்களின் ஆதரவை தெரிவிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இது மனித உரிமை சம்பந்தப்பட்ட விவகாரம். ஆகையால் ஒற்றுமையை வெளிப்படுத்த இது ஒரு சரியான தருணம் என்பதால் இந்த பேரணியில் ஒட்டுமொத்த மலேசியர்களும் திரள வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இந்த பேரணி நாளை சனிக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை டத்தாரான் மெர்டேக்காவில் நடைபெறுகிறது.


