Tuesday, April 21, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

சமூக பிணைப்புகளை வலுப்படுத்துகிறது HWPL இயக்கம்

கோலாலம்பூர் ஏப் 9
Ti-Ratana Lumbini Garden தலைவர் பாந்தே ஹெமலோகா தெராவின் அழைப்பை தொடர்ந்து HWPL மலேசியாவின் நிர்வாக உறுப்பினர்கள், கோலாலம்பூரில் உள்ள Ti-Ratana சமூக நல சங்கத்திற்கு வருகை புரிந்தனர்.
இந்த சமூக நல சங்கத்தின் பாதுகாப்பில் உள்ள சிறார்களுடன் HWPL தொண்டூழியர்கள் அதிகமான நேரத்தை செலுத்தி மகிழ்ச்சியுடன் உரையாடினர்.
குறிப்பாக 12 வயதிற்கும் கீழ்ப்பட்ட சிறார்களுக்கு பல பயனுள்ள நிகழ்ச்சிகளை இந்த தொண்டூழியர்கள் நடத்தினர்.
இந்த நிகழ்ச்சிகளில் சிறார்கள் முழுமையாக பங்கு பெற்று மகிழ்ச்சியடைந்தனர்.
Ti-Ratana சமூக சங்கம் மலேசியா முழுவதும் பல இல்லங்கள் மற்றும் சமூக நிலையங்களை நடத்தி வருகின்றன.
இந்த சங்கம் அனைத்து வயதையும் அடங்கிய தனி நபர்களுக்கு அடைக்கலம், கல்வி மற்றும் பாதுகாப்பை வழங்கி வருகிறது.


ஒரு மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே இந்த சங்கத்தின் தலையான நோக்கமாகும்.
இந்த சிறார்கள் ஒரு ஆரோக்கியமான சுற்றுச்சூழலில் வளர வேண்டும் என்பதை இந்த சங்கம் உறுதி செய்து வருகிறது.
இந்த சிறார்கள் கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் நீண்ட கால வாய்ப்புகள் பெறுவதை உறுதி செய்ய இவர்களுக்கு அதிகாரப்பூர்வ அடையாள ஆவணங்களை பெற்று தருவதில் இந்த சங்கம் உதவி வருகிறது.
இந்த சந்திப்பில் இந்நிலையத்தில் உள்ள 18 வயதிற்கும் கீழ்ப்பட்ட 100 சிறார்களுடன் இந்த தொண்டூழியர்கள் உறவாடி மகிழ்ந்தனர்.
பல்வேறு சவால்களை பின்னணியாக கொண்டுள்ள இந்த சிறார்கள், இப்போது கட்டொழுங்குடன் மற்றும் வலிமையான மொழி ஆற்றலுடன் இருந்து வருவது மகிழ்ச்யை தருகிறது.
இந்த சந்திப்பில் HWPL தொண்டூயர்கள் மீது இந்த சிறார்களுக்கு ஒரு வகையான பிணைப்பு ஏற்பட்டது.
இதனிடையே இந்த சந்திப்பில் இங்குள்ள சிறார்கள் உடன் அற்புதமான நேரத்தை தாங்கள் செலவழித்ததாக HWPL மலேசியாவின் இயக்குனர் நிங் போங் கூறினார்.
இந்த சிறார்கள் Ti-Ratana சமூக நல சங்கம் முறையாக பராமரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
செயல்பாட்டின் வழி நாட்டில் அமைதியை கொண்டு வருவதில் HWPL நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


T-Ratana சங்கத்தின் மாணவர்கள் மற்றும் பணியாளருடன் கலந்துரையாட வழங்கப்பட்ட இந்த வாய்ப்புக்கு HWPL நன்றி கூறுவதாக அவர் தெரிவித்தார்.
அமைதி மற்றும் இரக்க கலாச்சாரத்தை மேம்படுத்துவதில் HWPL முக்கிய பங்காற்றி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த அரசு சார்பற்ற இயக்கத்தின் பணிகள் குறித்து hwplmalaysia@gmail.com இணையத்தில் வலம் வரலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular