
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமை இன்னமும் நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.
அதே வேளையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கான்ன ஆதரவை மீட்டுக் கொள்ளவில்லை என்று முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி கூறினார்.
டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக இருப்பதற்கும், மடானி அரசாங்கத்தை வழிநடத்துவதற்கும் தொடர்ந்து முழு ஆதரவை வழங்குகிறேன்.
மேலும் 13 தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கான ஆதரவை வாபஸ் பெற்றதாக வெளியான வதந்திகளை நான் மறுக்கிறேன்.
உண்மையில், இந்தக் கதை பழையது. ஆரம்ப கட்டத்தில் அது உண்மையல்ல என்பதால் நான் அதைச் சமாளிக்க விரும்பவில்லை.
ஆனால் அது எழுத்து, வீடியோக்கள் மூலம் தொடர்ந்தது. எனவே இறுதியாக இன்று நான் பதிலளிக்க விரும்புகிறேன்.


