
இத்தாலியின் துணை பிரதமர் மற்றும் வெளிவிவகார துறை அமைச்சரான அன்டோனியோ தஜானி இந்தியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதன்பின்னர், ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் மத்திய வெளிவிவகார துறை மந்திரி எஸ். ஜெய்சங்கர் ஆகியோரை நேரில் சந்தித்து பேசுகிறார்.
இதேபோன்று அவருடைய இந்த பயணத்தில், மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை மந்திரி பியூஷ் கோயலையும் நேரில் சந்தித்து பேசுகிறார்.
ஜனாதிபதி திரவுபதி முர்முவை நாளை மறுதினம் மதியம் ராஷ்டிரபதி பவனில் சந்தித்து அவர் பேசவுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது.


