Saturday, November 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img

கோவையில் தவெக தலைவர் விஜய்: வேன் மீது தொண்டர்கள் ஏறியதால் பரபரப்பு

கோயம்புத்தூர் குரும்பபாளையம் பகுதியில் உள்ள எஸ்.என்.எஸ். பொறியியல் கல்லூரியில், தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி கூட்டம் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறுகிறது.

முதல் நாளான இன்று நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சார்ந்த 8000 பேர் கலந்து கொண்டுள்ளனர். நாளை கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த 8000 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.

விஜய் வருகையை முன்னிட்டு விமான நிலையத்திற்குள் 50 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

பூத் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் கட்சியினர் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர்.

விமான நிலையம் முதல் சித்ரா சிக்னல் வரை வழி நெடுங்கிலும் நீண்ட வரிசையில் நின்ற கட்சியினர் மற்றும் ரசிகர்கள் மேளதாளம் முழங்கவும், பூக்கள் தூவியும் விஜய்க்கு வரவேற்பு அளித்தனர்.

விமான நிலையத்தில் இருந்து விஜய் வெளியே வரும் போது ரசிகர்களிடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஏராளமான ரசிகர்கள் வந்ததால் விமான நிலையத்திற்கு உள்ளே இருந்து வெளியே வரக்கூடிய பயணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

அதே சமயம் விமான நிலைய வாயிலில் நின்றிருந்த பெண்கள் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் கீழே விழுந்த பெண் மீது பலர் ஏறி சென்றனர். இதனையடுத்து அந்த பெண் சக நண்பர்களால் மீட்கப்பட்டார்.

விஜய் விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் போது சாலை ஓரத்தில் உள்ள மரங்களில் நின்று இருந்த தொண்டர்கள் அவரது வேன் மீது குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் விஜய்க்கு வாழ்த்துகள் தெரிவித்து கீழே இறங்கினர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular