
அஸ்-சித்திகின் பள்ளிவாசல், கம்போங் பத்தாங் பெனார் மக்களுக்கு ரமலான் உதவிகள் வழங்கப்பட்டது.
பெர்சத்து சயாப் பிரிவின் சிரம்பான் தொகுதி தலைவர் டத்தோ சரவணக்குமார் இதனை கூறினார்.
புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் வசதி குறைந்த மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறேன்.
குறிப்பாக பள்ளிவாசல்களுக்கு நன்கொடைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் அஸ்-சித்திகின் பள்ளிவாசல், கம்போங் பத்தாங் பெனார் மக்களுக்கு ரமலான் உதவிகள் வழங்கப்பட்டது.
அதே வேளையில் சமையலுக்கு தேவையான உதவிப் பொருட்களுக்கும் மக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த உதவிகள் மக்களின் சுமையை குறைக்கும். அதே வேளையில் பள்ளிவாசல்கள் தங்களின் ரமலான் மாத நடவடிக்கைகளுக்கு இந்நன்கொடை பயனளிக்கும் என நான் நம்புகிறேன்.
வரும் காலங்களிலும் இதுபோன்ற உதவிகள் தொடரும் என்று தேசியக் கூட்டணி நீலாய் சட்டமன்ற ஒருங்கிணைப்பாளருமான டத்தோ சரவணக்குமார் கூறினார்.


