
கடந்த 2-2-2025 யொங் பெங் மகா மாரியம்மன் ஆலயத்தில் யொங் பெங் இந்து நற்பணி மன்ற ஏற்பாட்டில் பொங்கல் விழா மற்றும் தேவாரப்போட்டி மிகச் சிறப்பாக நடைப்பெற்றது.இருவதுக்கு மேற்ப்பட்ட குழுக்கள் வாயிலாக பொங்கல் வைத்தனர் அதே போல நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேவாரப்போட்டியில் பங்குப்பெற்றனர்.ஏரத்தாள நூற்றுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துக்கொண்டணர். இந்நிகழ்வு யொங் பெங் இந்து நற்பணி மன்ற தலைவர் சிவ ஸ்ரீ தே.ச.சசிதரன் சிவாச்சாரியார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு (GSR TOTAL LOGISTICS (M) SDN.BHD)தொழில் முனைவர் திரு.மோகன் குமார் ஸ்ரீ நந்தினி தம்பதியினர் சிறப்பு வருகை புரிந்து பரிசுகளை எடுத்து வழங்கினர்.இந்நிகழ்வு சமய நெறியுடன் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு சாஆ இந்து சங்க பேறவைத் தலைவர் திரு . சிவசுப்ரமண்யம் மற்றும் இந்து தர்ம மாமன்றத்தின் சமய ஆசிரியர் பெரியவர் திரு .முணியாண்டி அவர்கழும் கலந்துக்கொண்டனர்.அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. வருகை தந்த அனைவருக்கும் மன்ற கௌரவ செயலாளர் திருமதி. ஷாமினி நன்றியைத் தெறிவித்துக்கொண்டார்


