Tuesday, April 21, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

கட்சித் தேர்தல்களுக்கு பிகேஆர் தயாராகிறது!

கட்சித் தேர்தலுக்கு பிகேஆர் தயாராகி வருவதாக அக்காட்சியின் பொதுச் செயலாளர் செனட்டர் பூஸியா சாலே கூறினார்.
கட்டம் கட்டமாக வரும் ஏப்ரல் முதல் மே மாதம் வரை நடைபெறுவதற்கும் இந்த தேர்தலுக்கான ஏற்பாடுகள் சமூகமாக நடைபெற்று வருவதாக அவர் சொன்னார்.
வரும் மே மாதம் நடைபெறுவதற்கும் கட்சியின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கு போட்டி இருக்குமா என்ற முடிவை கட்சியின் தலைமைத்துவத்திடம் பிகேஆர் தலைவர் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விட்டுவிட்டதாக அவர் சுட்டிக் காட்டினார்.
பிகேஆர் ஒரு ஜனநாயக கட்சி என்பதால் இப்பதவிகளுக்கு போட்டி இருக்குமா அல்லது இல்லையா என்பதை கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகளுக்கு விடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
‘இந்த விவகாரத்தில் நான் தலையிடவில்லை. கட்சியின் தேர்தல் மற்றும் எதிர்வரும் கட்சியின் மாநாடு சுமுகமாக நடைபெற வேண்டும் என்பதில் மட்டுமே நான் கவனம் செலுத்தி வருகிறேன்’ என்றார் அவர்.
கட்சியின் இரண்டு உயர்மட்ட பதவிகளுக்கு போட்டி இருக்கக் கூடாது என்ற பரிந்துரை ஆலோசிக்கப்பட்டு வருவதாக அண்மையில் பிரதமரின் மூத்த அரசியல் செயலாளர் டத்தோஸ்ரீ சம்சுல் இஸ்கந்தார் கூறியிருந்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular