
இப்போட்டியில் பங்சார் வட்டாரம் சார்பில் அதிகளவிலான மாணவர்கள் பங்கேற்று, விலாய மாநில அளவில் மிக அதிகமான வெற்றிகளைப் பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளனர்.
மேலும், இவ்வாண்டிற்கான விலாய மாநில சுழல் கிண்ணத்தை (Challenge Trophy 🏆) பங்சார் வட்டாரம் வெற்றிகரமாகக் கைப்பற்றி பெருமை சேர்த்துள்ளது.
இந்த மகத்தான வெற்றிக்கு உறுதுணையாக இருந்த மாணவர்கள், பெற்றோர்கள், திருமுறை ஆசிரியர்கள், நடுவர்கள், தன்னார்வத் தொண்டர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் பங்சார் வட்டார செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் பங்சார் வட்டாரம் தனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
எல்லாம் வல்ல இறைவனின் அருளாலும், திருமுறை நாயன்மார்களின் திருவருளாலும் கிடைத்த இந்த வெற்றி, மேலும் பல ஆன்மிகப் பணிகளைச் செய்ய எங்களுக்கு ஊக்கமும் அருளாசியும் வழங்கட்டும்.
செயளாலர்
பங்சார் வட்டார பேரவை



