
சிரம்பான் டிச 21
அயல் நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் வர்த்தகம், தொழிற்பேட்டை மற்றும் கல்வி போன்ற துறைகளில் பங்கு பெற அழைக்கப்படுவதாக சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன் கோரிக்கை விடுத்தார்.
இதுபோன்ற துறைகளில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் அதிகமான வாய்ப்புகள் இருப்பதால், அயல் நாட்டு தமிழர்கள் தாராளமாக இந்த துறைகளில் பங்கு பெறலாம் என அவர் குறிப்பிட்டார்.
அண்மையில் நெகிரி செம்பிலான் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்த பாரதியார் விழாவில் தமதுரையில் அவர் குறிப்பிட்டார்.
தமிழகம் மற்றும் இதர நாடுகளைச் சேர்ந்த தமிழ் வம்சாவளிகள் கோலாலம்பூர் மற்றும் பினாங்கு போன்ற பகுதிகளில் மட்டுமே தங்களின் ஆர்வத்தை காட்டி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
ஆனால் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் இந்த துறைகளில் பங்கு பெற பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதாக அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த துறைகளில் ஆர்வம் கொள்ளும் அயல் நாட்டு தமிழர்களுக்கு உதவ நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஹருணுடன் பேச்சுவார்த்தை நடத்த தாம் தயார் என்றார் அவர்.
அதேவேளையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் பெரும்பாலோர் கோலாலம்பூரில் மட்டும் தான் தங்களின் படைப்புகளை நடத்த ஆர்வம் காட்டி வருகின்றனர் என அவர் சுட்டிக் காட்டினார்.
இதுபோன்று கலைஞர்கள் நெகிரி செம்பிலான் மாநிலத்திலும் தங்களின் ஆர்வத்தை செலுத்தலாம் என அவர் ஆலோசனை கூறினார்.
குறிப்பாக தமிழகத்தின் பிரபல நடிகர் அஜித் குமார் நெகிரி செம்பிலான் மாநிலத்திற்கு வருகை புரிய அண்மையில் அகில உலக தமிழ் சங்க தலைவர் டாக்டர் டி. இளங்கோவனிடம் தாம் தொடர்பு கொண்டு பேசியுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.

நடிகர் அஜித் சிலம்பானில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினால் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய தாம் தயார் என அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் வசூலிக்கப்படும் பணம் செலவுத் தொகையை கழித்து, மீதமுள்ள பணம் நாட்டிலுள்ள 532 தமிழ் பள்ளிகளுக்கு நடிகர் அஜித் குமார் கையிலே வழங்க தாம் விரும்புவதாக அவர் தெரிவித்தார். இந்த விழாவில் குணசேகரனுக்கு அகில உலக தமிழ்ச் சங்கம் உலக சாதனையாளர் விருதை வழங்கி கௌரவித்தது.
இந்த விழாவில் 16 நாடுகளைச் சேர்ந்த பேராளர்கள் உட்பட 350 பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


