Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

இந்திய பாரம்பரிய இசை ஒரு ஆன்மீக அனுபவமாகும்!

ஜியார்ஜ் டவுன் டிச 21
நமது இந்திய பாரம்பரிய இசை படைப்பு மட்டுமின்றி அது ஒரு ஆன்மீக அனுபவம் என தேசிய ஒற்றுமைத்துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
இந்த அற்புத இசைகளை படைப்பவர்கள் படைப்பாளர்கள் மட்டுமின்றி, தலைமுறை தலைமுறையாக நமது பாரம்பரிய கலாச்சாரங்களின் பாதுகாவலர்கள் என அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்கு சுவா ரஞ்சலி இசை நிகழ்ச்சியை தொடக்கி வைத்து அவர் பேசினார்.
இந்திய பாரம்பரிய இசை ஒரு ஆன்மீக அனுபவம். ஒவ்வொரு ராகமும் தாளமும் கதைகளை மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. இவை சில முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. இந்த பாரம்பரிய இசைகளை கேட்கும் பொழுது நாம் நம்மையே மறந்து விடுகிறோம். அதுபோல்தான் இந்த சுவராஞ்சலி இசை என அவர் குறிப்பிட்டார்.


இந்திய பாரம்பரிய இசை போற்றிப் பாதுகாக்க வேண்டிய ஒரு புதையல். இந்த அற்புத புதையலை உலகத்துடன் நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த பாரம்பரிய இசை நமக்கு அமைதியையும் மனநிம்மதியையும் தந்து வருகிறது.
இந்த பாரம்பரிய இசை தொடர்ந்து வரும் கால தலைமுறைக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த பாரம்பரிய இசை நிகழ்ச்சியில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்திய சித்தார் கலைஞர் சேமுவல் ஜே தாஸ், வீணை கலைஞர் லோக் கலா ரத்னா ஸ்வேதா பிரேம் குமார், தபேலா கலைஞர் பிரகாஷ் கந்தசாமி மற்றும் மிருதங்க கலைஞர் முத்துராமன் கணேசன் ஆகியோருக்கு சரஸ்வதி தமது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.


இந்த இசை நிகழ்ச்சிக்கு பினாங்கு டத்தோ பாண்டார் டத்தோ ராஜேந்திரன், மலேசிய குற்ற தடுப்பு அறவாரிய துணைத் தலைவர் டத்தோ புலேந்திரன், பினாங்கு இந்திய வர்த்தக சம்மேல் இனத்தின் அறங்காவலர் டத்தோ பழனியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular