Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

மலை சார்ந்த ரம்யமான நகர் சியாங் மாய்!

வட தாய்லாந்தின் மிகப் பெரிய நகரமான சியாங் மாய் மலை சார்ந்த ரம்யமான ஒரு நகரமாகும்.
இந்த நகரில் மட்டும் சுமார் 300க்கும் மேற்பட்ட புத்த ஆலயங்கள் சுற்றுப்பயணிகளை அதிகமாக கவர்ந்து வருகிறது.
இவற்றில் மிகப் புகழ்பெற்ற ஆலயம் வாட் ஃபிரா தாட் டோய் ஆலயமாகும்.
‘டோய் சுத்தப்’ என்று புகழ்பெற்று அழைக்கப்படும் இந்த ஆலயம் அனைத்துலக சுற்றுப்பயணிகளை அதிகமாக கவர்ந்து வருகிறது.


சுமார் 3,445 அடி உயரத்தில் உள்ள இந்த ஆலயத்திற்கு மலை ரயிலில் தான் செல்ல வேண்டும்.சியாங் மாய் நகரிலிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த ஆலயம் உள்ளது.
இந்த ஆலயத்தின் கோபுரங்கள் மற்றும் சிலைகள் தங்க முலாம் பூசப்பட்டு பலபலவென்று காட்சி தருவது நமது இதயத்தை அதிகமாக ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.


இந்த ஆலயத்தின் உச்சத்திலிருந்து சியாங் மாய் நகரின் அழகை நன்கு கண்டு ரசிக்கலாம். அழகிய சியாங் மாய் நகரில் மற்றொரு அழகான புத்த பௌத்த ஆலயம் இன்தானோன் தேசிய பூங்காவில் உள்ள இரட்டைக் கோபுர ஆலயமாகும்.
மலைப் பகுதியில் உள்ள இந்த இரட்டை கோயில் அனைத்துலக சுற்றுப்பயணிகளை அதிகமாக கவர்ந்து வருகிறது.
இவற்றில் ஒரு கோபுரம் அரசரையும் மற்றொரு கோபுரம் அரசியின் வரலாற்றையும் சித்தரிப்பதாக கூறப்படுகிறது.


இந்த ஆலயத்தின் சுற்றுச்சூழல்கள் இயற்கை அழகை அள்ளித் தருகிறது. வளைந்த மலைச் சாலைகள் மற்றும் வளிமண்டல நகரங்கள் வழியாக இந்த பௌத்த ஆலயங்களின் அழகை கண்டு ரசிப்பதில் ஒரு தனித்துவமான சுகம் என்று தான் கூற வேண்டும்.
தாய்லாந்து என்றால் புத்த ஆலயங்களின் சின்னம் என்று தான் கூற வேண்டும்.
இந்த ஆலயங்களில் உள்ள பௌத்த பிக்குகளின் தரிசனம் மற்றும் அவர்களின் உபதேசம் நம்மை மனமகிழ செய்கிறது.


இந்த பௌத்த ஆலயங்களை ஒரு முறை பார்த்தால் போதாது, மீண்டும் இங்கு வரவேண்டும் என்ற ஆர்வம் நம்மை தூண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. சியாங் நகருக்கு உலகின் தலைசிறந்த மலிவு கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியாவின் தினசரி 2 பயண சேவை, ஆயிரக்கணக்கான அனைத்துலக சுற்றுப் பயணிகளை இங்கு அழைத்து வருகிறது.
கேஎல்ஐஏ2 அனைத்துலக விமான நிலையத்திலிருந்து சியாங் மாய் நகருக்கான சுமார் இரண்டரை மணி நேர விமான பயணம், இந்த நகரில் வந்தடைந்தும் நமது பயணக் களைப்பை உடனே கலைத்து விடுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular