
கோலாலம்பூர் டிச 19
50ஆவது கோஷின் ரியூ கோல்டன் அனைத்துலக கராத்தே போட்டியில் கெடா கராத்தே கழகம் 1 தங்கம் மற்றும் 3 வெண்கல பதக்கங்களை வென்றது.
இந்த போட்டியில் கெடா கராத்தே கழகத்தை சேர்ந்த காயத்ரி சுரேஷ் குமித்தே பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்று பெருமை சேர்த்தார்.
யோகிஷா தனபாலன் இந்த போட்டியில் ஜூனியர் பெண்களுக்கான குமித்தே பிரிவில் வெண்கல பதக்கத்தை வென்றார்.
மற்றொரு போட்டியாளரான லுக்கேஷ் வர்மன் குலசீலன் குமித்தே பிரிவில் வெண்கல பதக்கத்தை வென்றார். இந்தப் போட்டியில் மலேசியா, இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய 3 நாடுகளைச் சேர்ந்த 235 போட்டியாளர்கள் கலந்து கொண்டதாக மலேசிய குழுவின் நிர்வாகி கியோஷி விஜய் கூறினார்.
மலேசிய குழுவிற்கு பயிற்சியாளர்களாக மாஸ்டர் உத்தேஷ் மற்றும் மாஸ்டர் சீதாலட்சுமி பங்காற்றினர்.

இந்த போட்டியில் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்ட கோஷின் ரியூ தலைவர் டத்தோ சொக்கே கிளேமன்ட் சூ, கோலாலம்பூர் கோஷின் ரியூ தலைவர் வசந்தன், கெடா கராத்தே கழகத்தின் தலைவர் கியோஷி டாக்டர் ஸ்டாலின், துணைத் தலைவர் என்டி மற்றும் வெற்றியாளர்கள் மற்றும் போட்டியில் பங்கு பெற்று அனைவருக்கும் அவர் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.


