Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

பாரம்பரிய இயற்கை அழகை அள்ளித் தரும் சியாங் மாய்!

வட தாய்லாந்தின் மிகப் பெரிய நகரமான சியாங் மாய் பல பாரம்பரிய அம்சங்களைக் கொண்ட ஒரு அற்புதமான நகராகும்.
தாய்லாந்தில் மிகப் புகழ்பெற்ற நகரங்களில் ஒன்றாக சியாங் மாய் திகழ்ந்து வருகிறது. தாய்லாந்தின் தலைநகரான பேங்காக்கை அடுத்து இரண்டாவது மிகப் பெரிய நகராக சியாங் மாய் திகழ்ந்து வருகிறது.
அண்மையில் உலகின் தலைசிறந்த மலிவு கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா, இந்த அற்புத நகருக்கு ஊடகவியாளர்களை அழைத்துச் சென்று இந்த நகரின் அற்புதங்களை சுற்றி காட்டியது.
இந்த பழமை வாய்ந்த நகரில் சுமார் 300க்கும் மேற்பட்ட புத்த ஆலயங்கள் உள்ளன. இந்த ஆலயங்களில் சில இந்த பழமை வாய்ந்த நகரின் ஆண்டிற்கு சமமாகும்.
இந்த நகரின் குளிரான மலைப்பிரதேசங்கள், பசுமையான மழைக் காடுகள், யானைகளின் சரணாலயங்கள் மற்றும் அற்புத பாரம்பரிய உணவுகள் அனைத்துலக சுற்றுப்பயணிகளை அதிகமாக ஈர்த்து வருகிறது.
அதிகமான அனைத்துலக சுற்றுப்பயணிகள் இந்த அற்புத நகரில் நீண்ட கால ஓய்வை விரும்புகின்றனர் என்பதில் சந்தேகமில்லை.
இந்த நகரில் புத்த கோயில்களை சுற்றி பார்ப்பது ஒரு அற்புதமான அனுபவம் என்று தான் கூற வேண்டும்.


அதிகமான அனைத்துலக சுற்றுப்பயணிகள் இந்த நகருக்கு சில வாரங்கள் மட்டுமே ஓய்வெடுக்க வருகின்றனர். ஆனால் இந்த நகரின் அற்புதங்களை கண்ட பின்னர் தங்களின் பயணத்தை சில மாதங்களுக்கு நீட்டிக்க செய்கின்றனர்.
சியாங் மாய் ஒரு உயிரோட்டமான, அற்புத, அழகான, இயக்க அள்ளித்தரும் ஒரு நகராகும்.செழுமையான பாரம்பரியங்கள், பசுமையான மலைகள் மற்றும் துடிப்பான திரு வாழ்க்கை ஆகியவற்றின் சியாங் மாயின் வசீகரமான கலவியானது. நீண்ட காலம் தங்குவதற்கு எளிதான இடமாக இந்த நகர் அமைகிறது. நகரின் அமைதியான அதிர்வு மற்றும் முடிவற்ற செயல்பாடுகள் இங்கு வருகை புரியும் சுற்றுப்பயணிகளை மெதுவாக்கவும், கலாச்சாரத்தில் திளைக்கவும், விரிவான வருகையை விட அதிக மதிப்புள்ள மறைக்கப்பட்ட ரத்தினங்களை கண்டறியவும் ஊக்குவிக்கின்றன. இந்த அழகான மற்றும் அற்புதமான நகர் இங்கு வருகை புரியும் அனைத்து சுற்று பயணிகளையும் மனமகிழ செய்கிறது என்பதில் சற்றும் சந்தேகமில்லை என்பது தான் உண்மையாகும்.இந்த ரம்யமான அற்புத நகருக்கு உலகின் தலைசிறந்த மலிவு கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா தினமும் 2 விமான சேவைகளை மேற்கொண்டு வருகிறது.
தினமும் இந்த அற்புத நகருக்கு பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை சற்றும் குறையவில்லை என்று தான் கூற வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular