Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

பாத்திக் ஏர் சுபாங்-கோத்தா கினபாலு நேரடி விமான சேவை!

சுபாங் டிச 18
பாத்திக் ஏர் சுபாங் சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையத்திலிருந்து கோத்தா கினபாலுவிற்கு நேரடி விமான சேவையை தொடங்குகிறது.
கோத்தா கினபாலுவிருந்து தாவாவை தாவாவை இணைக்கவும் மற்றும் சபாவில் இதர நகரங்களுக்கு பயணிகள் பயணிக்கவும் இந்த புதிய விமான சேவை ஏதுவாக அமைகிறது.
இந்த புதிய தினசரி விமான சேவையை எதிர்வரும் 17 ஜனவரி 2025-ல் தொடங்குகிறது.
சபாவிற்கு பயணிக்கவிருக்கும் பயணிகள் பரபரப்பான கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை தவிர்க்க, இந்த புதிய விமான சேவை ஒரு மாற்று வழியாக அமைகிறது.
மேலும் குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கு மக்கள் சுபாங்கிலிருந்து புறப்பட ஒரு புதிய அனுபவத்தை தருகிறது.
மேலும் இந்த புதிய விமான சேவை கோத்தா கினபாலு மற்றும் தாவாவ் ஆகிய நகர்களுக்கிடையே பயணம் செய்யும் சபா மக்களுக்கு நன்மையை ஏற்படுத்தும்.அப்படி இல்லையென்றால் தரை மார்க்கமாக இவர்கள் சுமார் 8 மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். விமான மூலம் ஒரு மணி நேரத்தில் சென்றடைய முடியும்.


இதனிடையே இந்த புதிய விமான சேவை சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையத்திலிருந்து மேற்கொள்ளப்படும் மூன்றாவது விமான சேவையாகும் என பாத்திக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.
சுற்றுலா மற்றும் வர்த்தக பயணிகளுக்கு இந்த புதிய விமான சேவை அதிகமான பயண வாய்ப்புகளை வழங்குவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு (கேஎல்ஐஏ) இது ஒரு மாற்று வழி மட்டுமின்றி, கிழக்கு மலேசியாவிற்கிடையே அதிகரித்து வரும் பயண தொடர்புகளுக்கு ஒரு தீர்வாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கோத்தா கினபாலு மற்றும் தாவாவ் நகரங்களின் இயற்கை அழகு, பல்வேறு கலாச்சாரம் மற்றும் வர்த்தக சுற்றுச்சூழல்கள் ஆகியவற்றை கண்டறிய கிள்ளான் பள்ளத்தாக்கு மக்களுக்கு இது ஒரு அற்புதமான வாய்ப்பு ஏன் அவர் தெரிவித்தார்.
மேலும் 2023 ஆம் ஆண்டில் மட்டும் கோத்தா கினபாலு மற்றும் தாவாவ் விமான நிலையங்கள் 35 லட்சம் பயணிகளை கையாண்டுள்ளதாக அவர் சொன்னார்.2024 ஆம் ஆண்டு இறுதியில் இந்த எண்ணிக்க 40 இலட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த புதிய விமான சேவையை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் பயணிகள் நெரிசலை குறைக்கும் என்றார் அவர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular