
சுபாங் டிச 5
எதிர்வரும் டிசம்பர் 14 ஆம் தேதி முதல் பாத்திக் ஏர் தமிழ்நாடு, திருச்சிக்கு தினசரி இரு விமான சேவைகளை மேற்கொள்ளவிருக்கிறது.
தமிழ்நாட்டுக்கு செல்லும் பயணிகளை எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பாத்திக் ஏர் திருச்சிக்கு தினசரி விமான சேவையை அதிகரித்துள்ளதாக அந்த விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.
மேலும் இது விடுமுறை காலம் என்பதால், தமிழ்நாட்டு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை துரிதமாக அதிகரிப்பு கண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ்நாட்டுக்கு செல்லும் மலேசிய சுற்று பயணிகள் மற்றும் இந்திய பிரஜைகள் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் அவர்.
வரும் டிசம்பர் 14 முதல் கோலாலம்பூர்-திருச்சிக்கு பாத்திக் ஏரின் முதல் விமானம் காலை 9.30-க்கு கேஎல்ஐஏ2 அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு இந்திய நேரப்படி காலை 10.45-க்கு திருச்சி அனைத்துலக விமான நிலையத்தை சென்றடையும்.

அன்றைய தினமே பாத்திக் ஏர் இந்திய நேரப்படி காலை 11.35 மணிக்கு திருச்சி அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு மாலை 17.55 மணிக்கு கேஎல்ஐஏ2 அனைத்துலக விமான நிலையத்தை வந்தடையும்.
கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கான பாத்திக் ஏரின் தினசரி இரவு விமான சேவை இரவு 8.10 முதல் இரவு 9 / இரவு 10.20 முதல் இரவு 11 மணிக்கு மேற்கொள்ளப்படுகிறது.


