Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

உலக FSKA கராத்தே போட்டியில் சீதாலட்சுமி தங்கம் வென்றார்!

கோலாலம்பூர் நவ 16
அண்மையில் இந்தியா, கோவாவில் நடந்த உலக FSKA கராத்தே போட்டியில் மலேசியாவைச் சேர்ந்த சீதாலட்சுமி குமார் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.
இந்த போட்டியில் சீனியர் குமித்தே பிரிவில் சீதாலட்சுமி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
மேலும் தனிநபர் சீனியர் காத்தா பிரிவில் சீதாலட்சுமி வெள்ளிப் பதக்கம் என்றார்.
அதே வேளையில் 50 முதல் 60 வயதிற்கான ஆண்கள் காத்தா பிரிவில் கியேஷி டாக்டர் எஸ்.விஜய் வெள்ளி பதக்கம் பெற்று பெருமை சேர்த்தார்.
மேலும் ஆண்களுக்கான தனிநபர் காத்தா பிரிவில் அவர் வெண்கல பதக்கம் வென்றார்.


இந்த போட்டியில் 22 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1500 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஜப்பானை சேர்ந்த கிரான்ட் மாஸ்டர் கெவின், போட்டியின் தலைவர் ஹன்ஷி ஹசான் முகமட் இஸ்மாயில், போட்டியின் இயக்குனர் ஜோஸ் சாகாஸ், போட்டியின் பிரமுகர் சூப்பர் ஸ்டார் ஹான்ஷி டாக்டர் சுமன் தல்வார் மற்றும் போட்டியின் ஏற்பாட்டு குழு தலைவர் ஹான்ஷி சஞ்சித் ஆகிய அனைவருக்கும் டாக்டர் விஜய் நன்றி கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular