Friday, April 17, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

அமெரிக்காவின் 47 ஆவது அதிபர் யார்?கமலா ஹாரிஸ்-டிராம்ப் இடையே கடுமையான போட்டி

கோலாலம்பூர் நவ 6
பரபரப்பாக நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில், அந்நாட்டில் 47 ஆவது அதிபர் யார் என்பது இன்று தெரிந்துவிடும்.
ஜனநாயக கட்சியின் வேட்பாளரும் துணை அதிபருமான கமலா ஹரிஸ் மற்றும் குடியரசு வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டோனால்ட் டிராம்ப் ஆகிய இருவருக்கிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
நேற்று வாக்கெடுப்பு முடிவடைந்ததை தொடர்ந்து, வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
தற்போதைய நிலவரப்படி டிராம்ப் முன்னிலை வகித்து வருகிறார்.
இந்த அதிபர் தேர்தலில் போட்டியின் வெற்றியாளருக்கு 270 பிரதிநிதித்துவ வாக்குகள் தேவைப்படுகின்றன.
தற்போதைய நிலவரப்படி டிராம்ப் 214 வாக்குகள் மற்றும் கமலா ஹாரிஸ் 179 வாக்குகள் பெற்றுள்ளதாக தெரிகிறது.
இந்த அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் என பல கருத்துக்கணிப்புகள் கூறி வருகின்றன.
அதிவேலையில் முன்னாள் அதிபர் டிராம்ப் தான் வெற்றி பெறுவார் என இன்னும் பல கருத்துக்கணிப்புகள் கூறி வருகின்றன.
பல முக்கிய மாநிலங்களில் கமலா ஹாரிஸ் முன்னிலை வகுத்து வருவதாக கூறப்படுகிறது.
தற்போதைய நிலையில் டிராம்ப் முன்னிலை வகித்து வந்தாலும், இன்னும் பல மாநிலங்களில் வாக்குகள் என்ன பட்டு வருகிறது.
இந்த தேர்தலில் இந்திய பூர்வீகத்தைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டுமென தமிழ்நாட்டில் பல ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular