Sunday, April 26, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஊடகவியலாளர்களுக்கு HEINEKEN பகல் உணவு உபசரிப்பு

கோலாலம்பூர் நவ 5
அண்மையில் தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு HEINEKEN நிறுவனம் ஊடகவியலாளர்களுக்கு பகல் உணவு உபசரிப்பு வழங்கியது.
தலைநகரில் பிரபல உணவகம் ஒன்றில் இந்த உபசரிப்பு நடைபெற்றது.
இந்த பகல் உணவு உபசரிப்பில் தமிழ் மலர் தலைமை நிர்வாகி டத்தோ எஸ்எம் பெரியசாமி, அலை ஓசை தலைமை ஆசிரியர் ர. நவநீத கிருஷ்ணன், தமிழ் மலர் விளம்பர பிரிவு நிர்வாகி ஆசைத் தம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.
HEINEKEN நிறுவனத்தின் அதிகாரிகள் பிரித்தி ஷர்மா,திவேனியா சுப்பிரமணியம் மற்றும் இதர அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்திய இளைஞர்களுக்கு சில சமூகத் திட்டங்களை நடத்துவது குறித்து HEINEKEN நிறுவனம் பரிசீரித்து வருவதாக இந்த சந்திப்பில் பிரித்தி ஷர்மா கூறினார்.
இந்த திட்டங்களுக்கு ஊடகங்கள் ஆதரவு தர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே HEINEKEN நிறுவனத்தின் இந்த திட்டங்களுக்கு உதவ தாங்கள் தயார் என டத்தோ பெரியசாமி கூறினார்.
இந்தத் திட்டங்கள் குறித்து HEINEKEN நிறுவனத்துடன் ஒரு பிரத்தியோக சந்திப்பை நடத்த அவர் பரிந்துரை செய்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular