
உலக அமைதிக்காக தென்கொரியா தலைநகரான சியோலை தளமாக கொண்ட தமது அரசு சாரா அமைப்பான HWPL இயக்கத்தின் வழி உலகளவில் அயராத பணிகளை மேற்கொண்டு வரும் அதன் தலைவர்
Lee Man-hee சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுக்காக தற்போது அங்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள செய்தி உலகளவில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
தென் கொரியாவில் உள்ள மக்கள் சக்தி கட்சியில் இணையும் படி தமது தலைமையின் கீழ் உள்ள Shincheonji உறுப்பினர்களை உத்தரவிட்டதாக இவருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் சட்டம் மற்றும் நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருப்பதாக போன்ற குற்றச்சாட்டுகளுக்காக தற்போது இவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கொரியா போரின் ஒரு முன்னாள் வீரரான 95 வயதுடைய
Lee Man-hee கடந்த 2013 ஆம் ஆண்டில் HWPL அரசு சாரா இயக்கத்தை தொடங்கி உலகளவில் அமைதிப் பணிகளை வெற்றிகரமாக நடத்தி வந்துள்ளார்.
கடந்த 2016 ஜனவரி 24 ஆம் தேதி இவரின் அயராத முயற்சியின் கீழ் இவரின் தலைமையில் மின்டானோ அமைதி போர் நிறுத்தம் கையெழுத்திட்டது.
இவரின் தலைமையின் கீழ் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 18 ஆம் தென் கொரியா தலைநகரான சியோல் நகரில் HWPL உலக அமைதி உச்சநிலை மாநாடு கோலாகலமாக நடைபெற்று வந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சியோல் நகரில் நடைபெறும் இந்த உச்ச நிலை மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளைச் சேர்ந்த அதிபர்கள், முன்னாள் அதிபர்கள், பிரதமர்கள், முன்னாள் பிரதமர்கள், அரசியல் பிரமுகர்கள், சமய தலைவர்கள், அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊடகவியாளர்கள் இந்த உச்ச நிலை மாநாட்டில் கலந்து கலந்து கொண்டு வருகின்றனர்.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த உச்ச நிலை மாநாடுகளில் இவரின் தலைமையின் கீழ் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இவற்றில் போர் நிறுத்த பிரகடனமும் நிறைவேற்றப்பட்டு வந்துள்ளன.
இந்த போர் நிறுத்த பிரகடனம் ஐநா சபைக்கு கொண்டு செல்ல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வந்துள்ளன.
உலக அமைதிக்காக இதுவரை 38 முறை உலக நாடுகளுக்கு இவர் வலம் வந்துள்ளார்.
இந்த நாடுகளில் மலேசியாவும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
போரில்லா ஒரு உலகம் வேண்டும், இது தான் இவரின் தாரக மந்திரம்.

ஒரு போர் வீரராக இருந்த தாம், கொரியா யுத்தத்தின் போது ஆயிரக்கணக்கான மக்களின் மரணம், மரண ஓலத்தை கேட்டு மனம் உடைந்து போனதாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் HWPL உச்ச நிலை மாநாட்டில் இவர் கூறி வருவது அனைவருக்கும் தெரிந்து கொண்டு.
உலக அமைதிக்கு தம்மை அர்ப்பணித்து வரும் இந்த 95 வயதுடைய மாபெரும் தலைவர் இன்று இரும்பு கூட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சம்பவம் உலகளவில் பெரும் வேதனையை தருகிறது. இவரின் முதுமை வயது, கொரியா போரின் மூத்த ராணுவ வீரர் மற்றும் HWPL இயக்கத்தின் வழி அனைத்துலக அமைதிப் பணிகளுக்காக இவரின் பங்களிப்பு, இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு இவரை தடுப்பு காவலில் வைத்திருப்பது கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.

இவரின் வயது, நன்கு அறிமுகமான ஊர் தலைவர் மற்றும் நீண்ட கால அமைதி பணிகளில் இவரின் பங்களிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இவரை தடுப்பு காவலில் வைத்திருப்பது நியாயமா? என்பதை பரிசலிக்க வேண்டும்.
தவறு செய்யாத ஒரு மாபெரும் தலைவரான
Lee Man-hee உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே உலக நாடுகளின் கோரிக்கையாகும்.
இவரின் அளப்பரிய அமைதிப்பணி தொடர வேண்டும் என்பதே உலக நாடுகளின் ஆவல்.


