Friday, July 17, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

அமெரிக்காவின் 22 கோடி வாக்காளர்களின் விவரங்களை சீனா விலை கொடுத்து சட்டவிரோதமாகப் பெற்றதாக டிரம்ப் கூறியுள்ளார்….

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், 2020-ம் ஆண்டு நடந்த அமெரிக்கத் தேர்தலில் சீனா தலையிட்டதாகக் குற்றஞ்சாட்டியிரருக்கிறார்….

அமெரிக்காவில் விரைவில் நடக்க இருக்கும் இடைத்தேர்தல் குறித்து ஜனாதிபதி டிரம்ப் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் 25 நிமிட உரையை ஆற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், தன்னை தோற்கடிக்க சீனா பல்வேறு சதித்திட்டங்களில் ஈடுபட்டது.அமெரிக்காவின் 22 கோடிவாக்காளர்களின் விவரங்களை சீனா விலை கொடுத்து சட்டவிரோதமாகப் பெற்று தனக்கு எதிராக எதிர்மறையான செய்திகளை எழுத, அமெரிக்க பத்திரிகையாளர்களுக்கு பெருமளவில் பணம் கொடுத்தது.

நவம்பரில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடைமுறையின் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் .மேலும், புதிய வாக்காளர் அடையாள அட்டை மசோதாவை நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular