Saturday, November 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img

SHINE MUSCAT திராட்சை பழத்தில் நச்சுத்தன்மை: மலேசிய சுகாதார அமைச்சு விசாரணை 

SHINE MUSCAT திராட்சை பழத்தில் நச்சுத்தன்மை உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதால் மலேசிய சுகாதார அமைச்சு விசாரணை மேற்கொள்ளும்.

பூச்சிகளைக் கொல்லும் பூச்சிகொல்லி மருந்து அதிகமாக இந்த திராட்சையில் கண்டறியப்பட்டதாக THE THAI PESTICIDE ALERT NETWORK அறிக்கையைத் தொடர்ந்து மலேசிய சுகாதார அமைச்சு நடவடிக்கையை முன்னெடுத்தது 

இதனிடையே 234 மாதிரி திராட்சை பழங்களைப் பகுப்பாய்வு செய்ததுடன் அதில் 1.7 விழுக்காடு MRL  எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டும் விதிமுறை பின்பற்றப்படவில்லை. 

இதனால், உணவு பரிசோதனை, அமலாக்கம் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அத்துடன் இறக்குமதி செய்யும் முன் அதற்கான உணவு உத்தரவாத சான்றிதழ் கொண்டிருக்க வேண்டும் என்று அமைச்சு விளக்கமளித்தது

1983ஆம் ஆண்டு உணவு சட்டத்தின் கீழ் அமலாக்க தரப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதையும் அமைச்சு சொன்னது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular