
கோலாலம்பூர் டிச 7
எப்பொழுதுமே கல்வி கற்பதில் ஆர்வம் கொள்ள வேண்டும். இந்த ஆர்வமே சுமார் 40 ஆண்டுகளாக ஒரு பல் மருத்துவராக பணிபுரிந்து வரும் டாக்டர் விஜேந்திரன் ராஜேந்திரம் ஒரு சட்டக் கல்வி பட்டதாரியாக தூண்டச் செய்தது.
ஒருவர் சௌகரியமான நிலையை அடைய காலம் கடந்து விடவில்லை என்பதற்கு 69 வயதுடைய டாக்டர் விஜேந்திரன் ஒரு முன் உதாரணமாக திகழ்கிறார்.
‘கல்வி கற்பதை நாம் நிறுத்தி விடக்கூடாது. ஒரு புதிய திறனை அல்லது கருவியை கையாள்வது போல் தான், இது மனநிலையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் மற்றும் இளமையாக வைத்துக் கொள்ளும் என நான் நினைக்கிறேன்’ என்றார் அவர்.
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு பல் மருத்துவ கல்லூரியிலிருந்து பட்டம் பெற்ற பிறகு கல்வி கற்கும் சுற்றுச்சூழல் பெரிய அளவில் மாற்றம் கண்டிருந்த போதிலும், விஜேந்திரன் சவால்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.
தமது சட்டக் கல்வியை கடந்த ஜனவரி 2022 ஆம் ஆண்டில் இவர் தொடங்கினார். முதல் இரண்டு ஆண்டுகளில் ஆன்லைன் மூலம் கல்வியை தொடர்ந்தார். மூன்றாம் ஆண்டில் பிஏசி கல்லூரியில் கல்வியை தொடர்ந்தார். ஆன்லைன் கல்வி ஒரு கிண்ண தேனீருடன் சுமூகமாக தொடரும் என இவர் கூறுகிறார்.
சட்டக் கல்வி வகுப்புகள் வார இரவுகள் மற்றும் வார இறுதிகளில் நடைபெறுவதால், வேலை மற்றும் கல்விக்கு இடையே ஒரு நடுநிலையான கால நேரத்தை விஜேந்திரன் திட்டமிட்டுக் கொள்வார்.
ஒரு பல் மருத்துவரான தமது மனைவி டாக்டர் உஷா தேவியுடன் கிள்ளான் பள்ளத்தாக்கில் டாக்டர் விஜேந்திரன் இரு பல் மருத்துவ கிளினிக்குகளை நடத்தி வருகிறார்.

இருப்பினும் சில தியாகங்கள் செய்ய வேண்டியுள்ளது.
‘ கடந்த மூன்று ஆண்டுகளில் பல குடும்ப நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்ளவில்லை’ என அவர் ஒப்புக்கொண்டார்.
தமது சட்டக் கல்வி பாடங்களை முடிக்க பல நள்ளிரவுகளை விஜேந்திரன் தியாகம் செய்துள்ளார். முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு இறுதிகளில் சட்டக் கல்வி தேர்வுகள் மிக முக்கியமாக அமைந்து விடும்.
‘காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மூன்றிலிருந்து ஐந்து கேள்விகளுக்கு நாம் பதில் தர வேண்டும். ஒவ்வொரு கேள்வியும் 2,000 சொற்களில் பதிலளிக்க வேண்டும்’ என அவர் குறிப்பிட்டார்.
தமது மனைவி மற்றும் மூன்று மகன்கள் ஆதரவுடன் எனது பணி தொடர்கிறது.
‘ இவர்களின் ஆதரவு எனக்கு உற்சாகத்தை தந்து வருகிறது. சட்டக் கல்வி வகுப்புகளுக்கு என் மனைவி தான் என்னை அனுப்புவார். பிறகு அங்கிருந்து வீட்டிற்கு அழைத்து வருவார். அவருக்கு நன்றி சொல்ல போதவில்லை’ என உருக்கமுடன் டாக்டர் ராஜேந்திரன் கூறுகிறார்.
கல்வி கற்க ஆர்வம் கொள்ள வேண்டும்!
இளமைப் பருவத்திலே சட்டக் கல்வியை பயில தமக்கு ஆர்வம் இருந்ததாக இவர் பகிர்ந்து கொள்கிறார். தொலைக்காட்சியில் அமெரிக்க சட்ட நாடகமான ‘பெரி மேசன்’ தொடரை தாம் விரும்பி பார்ப்பதுண்டு. இந்த நிகழ்ச்சியில் சட்ட மேதையான காலஞ்சென்ற கர்ப்பால் சிங் மூன்று அரசியல்வாதிகள் இந்த நிகழ்ச்சி தோன்றுவர். இவை அனைத்தும் தாம் சட்ட கல்வியை மேற்கொள்ள பெரும் உற்சாகத்தை தந்ததாக அவர் தெரிவித்தார்.

சட்டக் கல்வியை மேற்கொள்ள வேண்டும் என்று உந்துதல் எப்பொழுதுமே என் மனதை வருடி வந்தது.கோவிட் 19 தொற்று காலகட்டத்தில் இந்த சட்டக் கல்வி குறித்து சிந்திக்க தமக்கு போதுமான கால் அவகாசம் கிடைத்ததாக அவர் தெரிவித்தார். காரணம் இந்த காலகட்டத்தின் போது தமது வேலை நேரம் வெகுவும் குறைந்து விட்டதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இது ஒரு பொன்னான நேரம் என கருதியதால், சட்டக் கல்வியை மேற்கொள்ள பிஏசி கல்லூரியில் தாம் இணைந்ததாக அவர் தெரிவித்தார்.
இறுதியில் கல்லூரியில் சட்டக் கல்வியை தொடர்ந்து லண்டனில் உள்ள ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் பல்கலைக்கழகத்தில் கடந்த நவ 16 ஆம் தேதி பட்டம் பெற்றதாக டாக்டர் விஜேந்திரன் பெருமிதம் கொண்டார்.
டாக்டர் விஜேந்திரனுக்கு விஷால்(இசைக்கலைஞர்),கிரிஷன்ட்(டாக்டர்) மற்றும் காவிஷ்(நிதியாளர்) என மூன்று மகன்கள் உள்ளனர்


