
விரைவில் நடைபெறவிருக்கும் ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூலாய் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளில் மாநில மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹபிஸ் கஸாலி தலைமையில் தேசிய முன்னணி தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்த 3 சட்டமன்ற தொகுதிகளில் அம்னோ,மஇகா மற்றும் மசீச தேசிய முன்னணி சார்பில் போட்டியிடுகிறது.
புக்கிட் பாத்துவில் மஇகாவை பிரதிநிதித்து குமரன் போட்டியிடுகிறார்.
ஜொகூர் மாநில அரசாங்கம் மக்களுக்கு வழங்கி உள்ள சிறப்பான சேவைகள் குறித்து ஒன் ஹபிஸ் பிரச்சாரக் கூட்டங்களில் விளக்கம் தந்தார்.

இந்த பிரச்சாரக் கூட்டத்திற்கு மஇகா சார்பில் கட்சியின் உதவி தலைவர்
டத்தோ டி. முருகையா தலைமையேற்றார்.
தேசிய முன்னணி மக்களுக்கு தொடர்ந்து சிறப்பான சேவைகளை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
நடப்பு மாநில அரசாங்கம் இன பாகுபாடின்றி மக்களுக்கு பல நல்ல திட்டங்களை அமலாக்கம் செய்து வருவதாக அவர் சொன்னார்.
விரைவில் நடைபெறும் மாநில சட்டமன்ற தேர்தலில் கூலாய் நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்து மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் தேசிய முன்னணி வேட்பாளர்களை மக்கள் வெற்றியடைய செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே தேசிய முன்னணி அரசாங்கம் மக்களுக்கு தரமான சேவைகளை வழங்கி வருவதாக மஇகா ஊடகப் பிரிவு தலைவர் சிவசுப்பிரமணியம் கூறினார்.
எதிர்க் கட்சிகளின் பொய்யான வாக்குறுதிகளை வாக்காளர்கள் நம்பி விடக்கூடாது என அவர் வலியுறுத்தினார்.
புக்கிட் பாத்து தொகுதியில் போட்டியிடும் குமரனை அதிக வாக்குகளில் இங்கு உள்ள வாக்காளர்கள் வெற்றி அடைய செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.
மஇகா கட்சியின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் தலைமையில் இந்திய சமூகத்திற்கு சிறந்த சேவைகளை வழங்கி வருவதாக அவர் சொன்னார்.


