
எதிர் வரும் ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் மஇகாவை பிரதிநிதித்து போட்டியிடும் தேசிய முன்னணியின் வேட்பாளர் குமரனின் வெற்றிக்கு தீவிரப் பிரச்சாரத்தில் மஇகா ஈடுபட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக புக்கிட் பாத்து தொகுதியில் உள்ள மகளிர் அணியினருடன் தேசிய மஇகா முக்கிய தலைவர்கள் விரிவான பேச்சு வார்த்தையை நடத்தினர்.
கட்சியின் உதவி தலைவர்
டத்தோ டி. முருகையா, கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி சரஸ்வதி மற்றும் கட்சியின் ஊடகப்பிரிவு தலைவர் சிவசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த தேர்தல் பிரச்சாரத்தில் மகளிர் அணியின் தேர்தல் இயந்திரம் எவ்வாறு செயல்பட வேண்டும் என விரிவாக பேசப்பட்டதாக சிவசுப்பிரமணியம் தெரிவித்தார்.
புக்கிட் பாத்து தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளர் குமரன் வெற்றியை உறுதி செய்ய வியூக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆலோசனை கூறப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த தொகுதியில் வாக்காளர்களை சென்றடைய அடிமட்ட உறுப்பினர்களுடனான தொடர்பை வலுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

தேசிய மஇகா இந்திய சமூகத்திற்கு செய்து வரும் சேவைகளை இவர்களிடம் வலியுறுத்தப்பட வேண்டும் என ஆலோசனை கூறப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
விரைவில் நடைபெறுவதற்கும் ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் கட்சிப் போட்டியிடும் நான்கு தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதை மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
கட்சிக்கு இந்திய சமூகத்தின் ஆதரவு அதிகரித்து வருவதை இந்தப் பிரச்சாரத்தில் காண முடிகிறது என்றார் அவர்.


