
கோலாலம்பூர் ஆக 15
கோலாலம்பூர் விமானிகள் மற்றும் கேபின் பணியாளர்கள் போதைப் பொருட்கள் பரிசோதனைக்காக பணிக்கு சுமார் 2 மணி நேரம் முன்கூட்டியே வரவேண்டும் என்ற பரிந்துரையை மலேசியா சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் தியோங் கிங் சிங் முன் வைத்துள்ள நிலையில், அதற்கு National Union of Flight Attendants Malaysia (NUFAM) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பணியாளர்கள் ஏற்கனவே அதிக பணிச்சுமை மற்றும் சோர்வை எதிர்கொண்டு வருவதாகவும் மேலும் 2 மணி நேரம் முன்கூட்டியே வரவழைப்பது அவர்களின் சோர்வை அதிகரித்து விமான பாதுகாப்பையே பாதிக்கக்கூடும் என்று NUFAM எச்சரிக்கை விடுத்துள்ளது.
பணியாளர்களின் சோர்வு பாதுகாப்பிற்கு ஆபத்தானது என்றால் போதைப்பொருட்களின் தாக்கத்தில் ஒருவர் விமானத்தை செலுத்துவது எவ்வளவு பெரிய ஆபத்து விமானத்தில் பயணம் செய்யும் நூற்றுக்கணக்கான பயணிகளின் பாதுகாப்பிற்கு யார் பொறுப்பு? அமைச்சர் நோக்கம் விமான பணியாளர்களின் பணியில் ஈடுபடுவதற்கு முன்பே, போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான அபாயங்களை கண்டறிந்து விமான பாதுகாப்பை உறுதி செய்வதாகும். ஆனால் இதற்கு எதிராக NUFAM வைத்துள்ள கேள்விகள் வேடிக்கையாக உள்ளது.
விமானத்தில் பயணம் செய்யும் மக்கள் தங்களுடைய உயிரை விமானிகளின் கைகளில் ஒப்படைத்து விட்டு பயணம் செல்கின்றார்கள்.
அந்த நம்பிக்கைக்கு யார் பொறுப்பு?

இந்த விவகாரத்தில் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தலைமை அமைச்சு விமான பணியாளர்களின் வேலைசுமை, ஓய்வுநேரம், சோர்வு, போதைப்பொருள் பரிசோதனை மற்றும் பயணிகளின் பாதுகாப்பு ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து சமநிலையான தீர்வை உருவாக்க வேண்டும் என டத்தோஸ்ரீ அழகேசு கோரிக்கை விடுத்துள்ளார்.


