
புத்ரா ஜெயா ஆக 13
ஒற்றுமை அரசாங்கத்தில் நீடிப்பது குறித்து ஜசெக மாநாட்டின் முடிவை முன்னிட்டு இன்று நடைபெற்ற அமைச்சின் சந்திப்பு இறுதியானதா? என்ற வதந்தியை போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் நிராகரித்தார்.
மத்திய அரசாங்கத்தில் நீடிப்பது குறித்து வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் ஜசெக பேராளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படவிருக்கிறது.
ஆகையால் இன்று நடைபெற்ற அமைச்சின் கூட்டம் தமக்கு இறுதியானது என்ற தகவலை ஜசெக பொதுச் செயலாளருமான அவர் மறுத்தார்.
‘இன்றைய கூட்டம் எனது இறுதியான கூட்டம் என்பது உங்களுக்கு எப்படி தெரியும்? இது குறித்து நான் ஒன்றும் கூறவில்லையே’ என செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் ஜசெகவின் சிறப்பு பேராளர்கள் மாநாடு குறித்து பதற்றமாக இருக்கின்றீர்களா? என்ற கேள்விக்கு ‘நான் வழக்கம் போல் அமைதியாக இருக்கின்றேன்’ ஒரு என்றார் அவர்.
‘ஏன் இந்த கேள்வி உங்களுக்கு, இன்று அமைச்சின் தலைமைச் செயலாளரின் பிறந்தநாள் கொண்டாட்டம், இந்த கொண்டாட்டத்தில் நான் உற்சாகமாக இருக்கிறேன்’ என அவர் பதில் அளித்தார்.
ஒற்றுமை அரசாங்கத்தில் நீடிப்பது குறித்து வரும் ஞாயிற்றுக்கிழமை கட்சியின் 4,000 பேராளர்கள் ரகசிய வாக்கெடுப்பில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.


