Thursday, July 2, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

மலாய்கார வேட்பாளர்களுக்கு மட்டும் வாக்களியுங்கள் என மகாதீர் கூறுவதா? -இனவாத பேச்சு, டத்தோஸ்ரீ அழகேசு சாடல்!

எதிர் வரும் 16 ஆவது ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் மலாய் வாக்காளர்கள் மலாய்கார வேட்பாளர்களுக்கு மட்டும் வாக்களிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது இனவாதமாக பேசியுள்ளது மிகவும் வருந்தத்தக்க ஒன்று என மலேசிய மக்கள் மறுவாழ்வு சங்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அழகேசு சாடினார்.
முன்னாள் பிரதமரின் இந்த அறிக்கை இந்நாட்டில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்களின் மனதை மிகவும் புண்படுத்தி உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நாட்டின் ஒரு தேசியவாதி என கூறப்படும் இந்த முன்னாள் பிரதமர், முஸ்லிம் அல்லாதவர்களின் மனதை இப்படித் தான் புண்படுத்துவதா? என அவர் கேள்வி எழுப்பினார்.
மலேசியாவின் தலைமைத்துவத்திற்கு தலைமையேற்ற மகாதீர்,22 ஆண்டுகள் மற்றும் 22 மாதங்கள் மலாய்க்காரர்கள் வாக்குகளை மட்டுமே நம்பி இருந்தாரா? என அவர் கேள்வி எழுப்பினார்.


கடந்த 22 ஆண்டுகள் மற்றும் 22 மாதங்கள் சீன மற்றும் இந்திய வாக்காளர்களை மட்டுமே நம்பியிருந்து பிரதமர் பதவியை இவர் அலங்கரித்து வந்தார் என்பது தான் உண்மை.
இவரின் ஆட்சிக் காலத்தின் போது அம்னோவை தவிர்த்து மசீச மற்றும் மஇகாவை மட்டும் தான் நம்பி இருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும்.
இவ்விரு சமூகத்தின் ஆதரவு இல்லாவிட்டால் மகாதீர் ஒரு போதும் இவ்வளவு காலம் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்க முடியாது.
இனவாத போக்கை கொண்டிருக்கும் இந்த மூத்த தலைவரின் இனவாத போக்கினால், எதிர் வரும் ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி பெரும் வீழ்ச்சியை காண கூடும் என நம்பப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular