
விரைவில் நடைபெறவிருக்கும் ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் எம்ஐபிபி 5 தொகுதிகளில் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் புனிதன் அறிவித்தார்.
இந்திய சமூகமும் வாக்காளர்களும் ஒரு புதிய அரசியல் வழிதடத்தை எதிர்பார்ப்பதாக நேற்று பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் சின்னத்தின் கீழ் போட்டியிடும் கட்சியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
போட்டியிடும் நோக்கில் மட்டுமல்லாமல் இந்திய சமூகத்தின் கல்வி, வாழ்க்கை தரம் மற்றும் வேலை வாய்ப்புகளை உயர்த்தும் நோக்கத்தில் இந்த தேர்தல் களத்தில் தாங்கள் இறங்குவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
தமது கட்சி அனைத்து சமூகங்களுக்கும் பாகுபாடின்றி சேவைகளை வழங்கும் என அவர் உறுதியளித்தார்.
எம்ஐபிபி வேட்பாளர்கள் பட்டியல்:
லீனா மனோ மனோகரன்
(புக்கிட் பெர்மாய்)
ஜீவ குமார்
(கோத்தா ஸ்கந்தார்)
அனா பிரவீனா
(பெர்மாய்)
டாக்டர் அரவேந்திரன்
(பெமானி)
வேலா தீபகுமாரன்
(பெர்மாஸ்)


