Friday, June 26, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் கூட்டணியின் கட்டொழுங்கை பற்றி பேசுவதா?

பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டத்தோஸ்ரீ சாம்சுரி மொக்தார் கூட்டணியின் கட்டொழுங்கை பற்றி பேசுவதை பற்றி தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பெர்சாத்து கட்சியின் உச்ச மன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சஞ்சீவன் ராமகிருஷ்ணன் கூறினார்.
இக்கூட்டணியின் உள் உவகாரங்கள் பற்றி பேசும் தலைவர்கள் விஷயத்தில், சம்சுரி ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்ளக் கூடாது என அவர் நினைவுறுத்தினார்.
இந்த விவகாரத்தில் பெர்சாத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினை மட்டும் ஏன் சாட வேண்டும்? என அவர் கேள்வி எழுப்பினார்.
பெரிக்காத்தான் நேஷனல் உள் விவகாரங்கள் குறித்து பாஸ் தலைவர் மற்றும் அக்கட்சியின் இதர தலைவர்கள் பல முறை வெளிப்படையாக அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டினார்.
பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் அறிக்கைகளை வெளியிட பாஸ் தலைவர் ஹாடிக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? அவர் வினவினார்.
கூட்டணியின் விவகாரங்களை அறிவிக்கும் உரிமை பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் உச்ச மன்றத்திற்கு மட்டும் இருப்பதாக அவர் தெளிவுபடுத்தினார்.
கூட்டணியின் கட்டொழுங்கை தற்காக்க வேண்டும் என பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் உண்மையாக விரும்பினால், அதன் அனைத்து பங்காளி கட்சிகளிடம் உரை நிலைப்பாட்டை கொண்டிருக்க வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.
கூட்டணியின் கொள்கையை நிலை நிறுத்த விரும்பும் ஒரு தலைவர், பாகுபாடாக நடந்து கொள்ளக் கூடாது.
கூட்டணியை பற்றி தொடர்ந்து அறிக்கைகளை வெளிப்படையாக வெளியிட்டு வரும் பாஸ் கட்சி தலைவர் மற்றும் அக்கட்சியின் இதர தலைவர்களை கட்டொழுங்குடன் நடந்து கொள்ள செய்ய வேண்டும் என்றார் அவர்.
இந்த விவகாரத்தில் பாரபட்சம் காட்டுவதை கூட்டணி தலைவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular