Thursday, May 28, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

என்னை இசைக்கடவுளாக பார்ப்பவர்கள் பார்த்துக்கொள்ளட்டும்! – இளையராஜா

இசைத்துறையில் 50 ஆண்டு நிறைவு கொண்டாடும் இளையராஜா, தன்னுக்கு வருடமே இல்லை, தினமும் வேலை செய்கிறேன் என்கிறார். பால்கியின் தமிழ் படத்துக்காக பாடல் பதிவு செய்து வருவதாகவும், ரசிகர்கள் இசைக்கடவுள் என அழைப்பது அவர்களின் அன்பு, மதிப்பு என்பதையும் கூறுகிறார். இசை புனிதமான இடத்திலிருந்து வரும், நான் இல்லாவிட்டாலும் இந்த மக்கள் கொண்டாட்டம் தொடரும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்.

இசைத்துறையில் தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியம் படைத்த இளையராஜாவுக்கு இது சினிமாவில் 50ம் ஆண்டு. அவரின் முதல் படமான அன்னக்கிளி 1976ம் ஆண்டு இதே நாளில் (மே 14) வெளியானது. இதனை முன்னிட்டு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய இளையராஜா “உங்களுக்கு தான் 50 வருடம், எனக்கெல்லாம் வருடமே இல்லவே இல்லை. தினமும் வேலை செய்கிறேன். இப்போது பால்கியின் தமிழ் படத்துக்காக பாடல் ரெக்கார்ட் செய்து வருகிறேன். இப்போது பாடகியை பாட வேண்டாம் ஒய்வு எடுங்கள், நான் இல்லாமல் பாடினால் திருத்தம் சொல்ல முடியாது என சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். வருடம் தான் போய்க்கொண்டே இருக்கிறது தவிர நான் அங்கேயே தான் இருக்கிறேன். நான் எப்படி வந்தேனோ இன்னுமும் அப்படியே சென்று கொண்டிருக்கிறேன். அதை தவிர எனக்கு ஒன்றும் தெரியாது. இந்த நேரத்தில் இதனை நினைவு வைத்து எனக்கு வாழ்த்து சொல்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் இருக்கிறீர்கள் அதனால் நான் இருக்கிறேன்.” என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular