Wednesday, July 15, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

பங்சார் வட்டார 48-ஆம் ஆண்டு திருமுறை ஓதும் விழா!

தில்லை கூத்தன் திருவருளால், 2026 ஆம் ஆண்டின் மலேசிய இந்து சங்கம் பங்சார் வட்டார 48-ஆம் ஆண்டு திருமுறை ஓதும் விழா, 12.07.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மிகச் சிறப்பாகவும், பக்தி நிறைந்த சூழலிலும் நடைபெற்றது.

பங்சார் வட்டாரத் தலைவர் திரு குணசெகரன் சுப்ரமணியம் அவர்களின் தலைமையில், செயற்குழு உறுப்பினர்களுடன் இடபக்கொடி ஏற்றி கொடிக்கவி, திருமுறை, சிவபுராணம் ஓதி நால்வர் பெருமக்கள் வீதி உழா (மாணவர்கள் வேடம்) என சிவவழிபாட்டுடன் விழா இனிதே தொடங்கியது.

தொடர்ந்து, சமயச் சொற்பொழிவுகள், திருக்குறள் சிந்தனைகள், சமய வினா-விடை நிகழ்ச்சி, மற்றும் திருமுறை ஓதும் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இறுதியில் சோதி வழிபாட்டுடன் விழா நிறைவுற்றது.

இந்நிகழ்வில், மலேசிய இந்து சங்கம் விலாய மாநிலத் தலைவர் திருமதி சாந்தா சுப்பையா, மாநில துணைச் செயலாளர் திருமதி சூரியகலா, செதாபாக் வட்டாரத் தலைவர் திரு ஆனந்த் ராஜ், பங்சார் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி தேவி, வட்டார மூத்த அங்கத்தினர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற உறுதுணையாக இருந்த அனைத்து செயர்க்குழு உறுப்பினர்கள் , நடுவர்கள், பெற்றோர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் பங்சார் வட்டாரம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

“நற்றுணையாவது நமச்சிவாயவே!”
செயளாலர்
பங்சார் வட்டார பேரவை
13/7/2026

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular