
ஜொகூர் பாரு ஜூலை 15
நடந்து முடிந்த ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாக்காத்தான் ஹராப்பான் தோல்வி கண்ட போதிலும் தாங்கள் துவண்டு விடவில்லை என அக்கூட்டணியின் துணைத் தலைவர் அந்தோனி லோக் கூறினார்.
எதிர் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாக்காத்தான் ஹராப்பான் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என போக்குவரத்து அமைச்சருமான அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
‘முதலாம் சுற்றி தாங்கள் தோல்வி கண்டாலும், இரண்டாம் சுற்றில் வெற்றி பெறுவோம்’ என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
‘ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் தோல்வி அடைந்து விட்டதால், அதற்காக துவண்டு விடவில்லை’ என்றார் அவர்.
அரசியல் போராட்டத்தில் வெற்றி தோல்வி என்பது சகஜமான ஒன்று.எதிர் வரும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெறும் என ஜசெக பொதுச் செயலாளருமான அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நேற்று இரவு கோலா பிலாவில் எதிர் வரும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான பாக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கும் நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
பிரதமரும் பாக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தார்.


