Thursday, May 28, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

’குதிரைப்பேரம் செய்து அதிமுகவை உடைக்க முயற்சி’ – விஜயை விமர்சித்த அன்பழகன்!

சி.வி. சண்முகம் கூறியபடி திமுக கூட்டணிக்காக கையெழுத்து பெறப்படவில்லை, சட்டமன்ற குழுத் தலைவருக்காக மட்டுமே கையெழுத்து பெற்றோம் என அன்பழகன் கூறினார். விஜய் பலவீனமான முதலமைச்சர், குதிரைப்பேரம் மூலம் கட்சிகளை உடைக்க முயற்சி செய்கிறார் என கடுமையாக விமர்சித்தார்.

சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்த புதுவை மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அன்பழகன்

அன்பழகன்

அப்போது பேசிய அவர், “கனத்த இதயத்தோடு நான் தற்போது நிற்கிறேன். சுயநலமிக்க சில சட்டமன்ற உறுப்பினர்களால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அதிமுக நிர்வாகிகள் மனவேதனையில் உள்ளனர். எஸ் பி வேலுமணி, C. V. சண்முகம்  ஆகியோர் எங்கள் நண்பர்கள் தான். ஆனால் தற்போது நடப்பது வருத்தமளிக்கிறது என்று பேசினார்.

மேலும் சட்டப்பேரவையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பேசிய அவர், “இதற்கு முன் ஒவ்வொரு முறையும் அதிமுக பொதுச்செயலாளர் தரப்பிலிருந்தே கடிதம் வழங்கப்படும். அதன் அடிப்படையில்தான் நடவடிக்கைகள் நடைபெறும்” என தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular