
ஜொகூர் மாநில அரசாங்கம் செயலாளர் டத்தோ முகமட் ரிடாவுடன் போக்குவரத்து அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ ஜானா சந்திரன் முனியன் பணி நிமித்த சந்திப்பை நடத்தினார்.
போக்குவரத்து அமைச்சு மற்றும் ஜொகூர் மாநில அரசாங்கத்திற்கிடையே வியூக ஒத்துழைப்பு மேலும் வலுவடைய வேண்டும் என இந்த சந்திப்பில் டத்தோஸ்ரீ ஜானா வலியுறுத்தினார்.
ஜொகூர் மாநிலத்தில் பொது போக்குவரத்து தரத்தை மேம்படுத்துதல் மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பில் விரிவாக பேசப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஜொகூர் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் நவீனமய போக்குவரத்து முறை குறித்து இந்த சந்திப்பில் வலியுறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
ஜொகூர் மாநிலம் துரித வளர்ச்சியை கண்டு வருவதால், போக்குவரத்து முறை மேம்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.

ஜொகூர் நாட்டின் முக்கிய நுழைவாயில் மட்டுமல்லாமல், துரித பொருளாதார வளர்ச்சி கண்டு வரும் ஒரு மாநிலம் என்றார் அவர்.
இந்த நிலையில் மத்திய அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கத்திற்கு இடையே சுமூகமான ஒத்துழைப்பு இருக்க வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
தமது ஜொகூர் மாநில வருகையில் மற்றொரு அங்கமாக ஜொகூர் துறைமுக வாரிய மக்களுடன் ஒரு கலந்துரையாடலில் அவர் கலந்து கொண்டார்.
ஜொகூர் மாநிலம் வேகமாக வளர்ச்சி கண்டு வருவதால், துறைமுகத் துறையின் மேம்பாடு தரமாக இருக்க வேண்டும் என அவர் சுட்டிக் காட்டினார்.


