Wednesday, May 13, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஒற்றுமையே நமது பலம் -பி.குமரேசன்

நம்மிடையே இருந்து வரும் ஒற்றுமை நமது பலம் என பாஸ் ஆதரவு பேரவையின் புதிய தலைவர் பி. குமரேசன் கூறினார்.
தம்மீது நம்பிக்கை வைத்து தம்மை இப்பதவியில் அமர்த்திய அனைத்து தரப்பினருக்கும் தாம் நன்றி கூறிக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
‘என்னை இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டது எனது வெற்றியல்ல. உங்கள் அனைவரின் பிளவுபடாத ஆதரவு’ என்றார் அவர்.
பாஸ் கட்சியின் தலைமைத்துவம் மற்றும் பேராளர்கள் தமக்கு வழங்கிய பிளவுபடாத ஆதரவு இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என அவர் சுட்டிக் காட்டினார்.
தமது தலைமையிலான பாஸ் ஆதரவு பேரவை சீர்திருத்தம் செய்யப்பட்டு, மேன்மையான நிலைக்கு கொண்டு செல்லப்படும் என அவர் உறுதி அளித்தார்.
இந்த அமைப்பில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, மேலும் வலிமைப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.
விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நாட்டின் 16 ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள, பாஸ் ஆதரவு பேரவை தன்னை தயார் நிலையில் வைத்துக் கொள்ளும் என்றார் அவர்.
வரும் பொது தேர்தலில் பாஸ் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றிக்கு, பாஸ் ஆதரவு பேரவை கடுமையாக பாடுபடும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பெரிக்காத்தான் நேஷனல் தலைமையில் அனைத்து மலேசியர்களுக்கும் சம நீதி கொண்டுவரப்படும் என அவர் தெரிவித்தார்.
ஒரு அமைப்பின் வெற்றிக்கு ஒற்றுமையை பிரதான காரணமாகும்.
ஆகையால் ஒற்றுமைக்கு நாம் முன்னுரிமை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular