Wednesday, May 13, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

விஜயின் வெற்றி சீர்திருத்திக் கொள்கைகள் மீதான நம்பிக்கையையும், பாகுபாடு அரசியலுக்கு எதிரான எதிர்பார்ப்பையும் பிரதிபலிக்கிறது!

தமிழக முதலமைச்சராக நியமனம் பெற்றுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய்க்கு,பெரிக்காத்தான் நேஷனல் வாழ்த்துக்களை கூறுவதாக அக்கூட்டணியின் பொதுச் செயலாளர் தாக்கியுடின் ஹசான் கூறினார்.
இந்த வெற்றி சீர்திருத்தம், நீதி, சமூக நல்லிணக்கம், இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்தல், நவீன மயமாக்கல் ஆகியவற்றிற்க்கான இவரது தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிப்புதாக அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் நடிகரான இவர்,’தளபதி விஜய்’ என்று மக்களிடையே மிகவும் பிரபலமாக அறியப்படுபவர். இவரது கலைப்பயணம், மனிதாபிமான செயல்கள் மற்றும் பண்புகளுக்காக, மலேசியாவில் குறிப்பாக இந்திய இளைஞர்களுக்கிடையே பெரும் மதிப்பையும் அன்பையும் பெற்றுள்ளார்.
எனவே இவரது அரசியல் எழுச்சியானது பலரால் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கவனிக்கப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாடு மற்றும் இந்திய வம்சாவளி மலேசியர்களுக்கிடையிலான நீண்டகால வரலாற்று, கலாச்சார மற்றும் மொழி ரீதியான தொடர்புகளின் பின்னணியில் இது முக்கியத்துவம் வருகிறது.
தமிழ்நாடு மேன்மேலும் வளர்ச்சி, நிலத்தன்மை மற்றும் செழுமையை நோக்கி பயணிப்பது இவர் பெரும் வெற்றி பெற வேண்டும் என தாங்கள் வாழ்த்துவதாக அவர் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular