Saturday, April 25, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

தொழிலின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு இந்த பயிற்சி கொண்டு செல்லும்!

இது ஹெனிக்கன் மார்க்கெட்டிங்கின் Tiger Empower மலர் டெய்லி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் வழங்கும் ஒரு சமூக மேம்பாட்டு முயற்சியாகும்.
இந்த ஒத்துழைப்பின் கீழ் இந்திய சிறு குறுந் தொழில் முனைவோருக்கு டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்துதல் பற்றி ஒரு இலவச பயிற்சி நடத்தப்படுகிறது.
எதிர்வரும் மே 4 ஆம் தேதி முதல் மே 8 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கோலாலம்பூரில் இந்த பயிற்சி நடைபெறவுள்ளன.
இந்த இலவச பயிற்சியில் பங்கு பெற 10 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பயிற்சி தமது தொழிலின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் என தாம் நம்புவதாக இப்பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்ட ரவாங்கை சேர்ந்த Synthesis Leisure Cafe நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ரோகிணி சிவலிங்கம் கூறுகிறார்.
தம்மைப் பற்றி அவர் கூறுவது….


கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் Synthesis Leisure Cafe என்ற பெயரில் இந்த சுவை பான விற்பனையை தாம் தொடங்கியதாக ரோகிணி கூறுகிறார்.
தொடுக்கட்டமாக ஆன்லைன் மூலம் காப்பி, தேநீர் மற்றும் குளிர் பானங்களை விற்பனை செய்து வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
பிறகு 2025 ஆம் ஆண்டில் நிகழ்ச்சிகளில் சாவடி(Booth) அமைத்து இந்த சுவை பானங்களை விற்பனை செய்ய தொடங்கியதாக அவர் தெரிவித்தார்.
இது போன்ற நிகழ்ச்சிகளில் தமது பானங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த தொழிலில் தொடர்ந்து கால் பதிக்க, நேற்று ஏப் 24 தேதி முதல் தலைநகர் புக்கிட் பிந்தாங்கில் உள்ள பெடரல் ஹோட்டலில்
Kiosk(கியோஸ்க்) ஒன்றை தாம் தொடங்கியுள்ளதாக அவர் பெருமிதம் கொண்டார்.
புக்கிட் பிந்தாங்கில் அதிகமான சுற்றுப்பயணிகள் வருகை புரிவதால் தமது சுவை பானத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதே போன்ற ஒரு கியோஸ்க் எதிர் வரும் மே 1 ஆம் தேதி ஷா ஆலமில் உள்ள புஞ்சாக் ஆலமில் தாம் திறக்க விருப்பதாக அவர் தெரிவித்தார்.


தமது தயாரிப்பிலான பானங்களுக்கு தாவர அடிப்படையிலான குறிப்பாக தேங்காய் பால் பயன்படுத்துவதால், மக்கள் விரும்பி அருந்துவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த பயிற்சிக்கு தாம் தேர்வு செய்யப்பட்டதற்கு தாம் மகிழ்ச்சி அடைவதாக அவர் சொன்னார்.
இந்த பயிற்சியில் கலந்து கொள்வதால், தமது இந்த தொழிலை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்ல முடியும் என தாம் நம்புவதாக ரோகிணி தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular