Monday, April 27, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

தொழிலை நவீன மயப்படுத்த இந்த பயிற்சி உதவும்!

இது ஹெனிக்கன் மார்க்கெட்டிங்கின் Tiger Empower மலர் டெய்லி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் வழங்கும் ஒரு சமூக மேம்பாட்டு முயற்சியாகும்.
இந்த ஒத்துழைப்பின் கீழ் இந்திய சிறு குறுந் தொழில் முனைவோருக்கு டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்துதல் பற்றி ஒரு இலவச பயிற்சி நடத்தப்படுகிறது.
எதிர் வரும் மே 4 ஆம் தேதி முதல் மே 8 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கோலாலம்பூரில் இந்த பயிற்சி நடைபெறவுள்ளன.
இந்த இலவச பயிற்சியில் பங்கு பெற 10 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பயிற்சி தமது தொழிலை நவீன மயப்படுத்த உதவும் என்றும் தான் நம்புவதாக இப்பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்ட பந்திங்கை சேர்ந்த ஒரு விவசாயியான ரவீந்திரன் கூறுகிறார்.
தம்மைப் பற்றி அவர் கூறுவதாக


நான் கடந்த 13 வருடங்களாக பந்திங்கில் விவசாயத்துறையில் ஈடுபட்டு வருகிறேன்.
Simply Fresh Farm Enterprise என்ற எனது விவசாயத்துறையில் காளான் விவசாயம் செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன்.
காளான் விவசாயத்தில் பெரும்பாலும் சீனர்கள் தான் ஈடுபட்டு வருவது வழக்கமாகும்.
காளான் பயிடுவதற்கு சுத்தமான இடமும் மரத்தூளும் தேவைப்படும்.
இந்த விவசாயத்தில் அதிக கவனம் செலுத்தி வெற்றிகரமாக செய்து வந்துள்ளேன்.
காளான் பயிரிடுவது எப்படி என்பது குறித்து பலருக்கு நான் கற்றுத் தந்துள்ளேன்.
மேலும் தமது தோட்டத்தில் மரவள்ளி கிழங்கு மற்றும் இதர காய்கறி வகைகளை பயிரிட்டு விற்பனை செய்து வருகிறேன்.
தற்போது எனது விவசாயத்தை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு வருகிறேன்.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக ice cream, cakes போன்றவற்றை செய்ய தேவைப்படும் வனிலா அவரைச் செடிகளை நடும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். இந்த விவசாயத்துறையில் ஈடுபடும் முதல் இந்தியர்.
இதற்கு Mardi மற்றும் Mitra எனக்கு உதவ முன்வந்துள்ளனர்.
குறிப்பாக Mitra இந்தத் திட்டத்திற்கான உதவித்தொகையை வழங்குகிறது என்றார் அவர்.


இந்த விவசாயத் துறையில் தொடர்ந்து கால் பதிக்க தற்போது தான் டிப்ளோமா பட்டப் படிப்பை முடித்ததாக அவர் தெரிவித்தார்.
அடுத்த கட்டமாக இந்தத் துறையில் மாஸ்டர் பட்டப் படிப்பை மேற்கொள்ள தாம் திட்டமிட்டுள்ளதாக ரவீந்திரன் தெரிவித்தார்.
ஆகையால் இந்த பயிற்சியில் பங்கு பெற தாம் ஆர்வம் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular