Friday, April 17, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

மனித மைய எதிர்காலத்தை உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு-AI Impact Summit 2026!

மனித வரலாற்றின் முக்கியமான திருப்புமுனையில் உலகம்.
புது டெல்லி நகரில் நடைபெற்ற AI Impact Summit 2026-ல் உலகத் தலைவர்கள் ஒன்று கூடினர். இந்த மாநாட்டை வழி நடத்திய இந்தியாவாகிய நமக்கு பெரும் பெருமையும் மகிழ்ச்சியும் அளித்த தருணமாக இது அமைந்தது.
உலகம் முழுவதிலுமிருந்து தலைவர்கள், அரசாங்கத் தலைவர்கள், பிரதிநிதிகள், வல்லுனர்கள் மற்றும் புதுமையாளர்களை வரவேற்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்தியா எந்த செயலும் மேற்கொண்டாலும் அதில் பெரும் அளவு உற்சாகத்தை கொண்டு செயல்படுகிறது. இந்த மாநாடும் அதற்கு விதிவிலக்காக இல்லை என்று தான் கூற வேண்டும்.
நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த உச்ச நிலை மாநாட்டில் ஒன்றிணைந்தனர்.
புதுமை கண்டுபிடிப்பாளர்கள் cutting-edge AI தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்தினர்.
இந்த உச்ச நிலை மாநாட்டில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கண்காட்சி அரங்குகளில் கேள்விகள் கேட்டு எதிர்காலத்தை கற்பனை செய்து கொண்டிருந்தனர்.
அவர்களின் ஆர்வம் இந்த மாநாட்டை உலகின் மிகப்பெரிய மற்றும் மிக ஜனநாயகமான AI மாநாடாக மாற்றியது. இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் இது ஒரு முக்கியமான தருணம் என நான் கருதுகிறேன்.


ஏனெனில் AI புதுமை மற்றும் பயன்பாட்டிற்கான மக்கள் மயமான இயக்கம் உண்மையில் ஆரம்பமாகியுள்ளது.
மனித வரலாறு பல தொழில்நுட்ப மாற்றங்களை கண்டுள்ளது. அவை நாகரீகத்தின் பாதையை மாற்றி அமைத்துள்ளன.
செயற்கை நுண்ணறிவு (AI) நெருப்பு, எழுத்து, மின்சாரம் மற்றும் இணையும் போன்ற புரட்சிகரமான மாற்றங்களின் வரிசையில் திகழ்கிறது. ஆனால் AI உடன் ஒரு காலத்தில் பல தசாப்தங்கள் எடுத்த மாற்றங்கள் சில வாரங்களிலேயே நிகழ்ந்து, முழு உலகையும் பாதிக்கக்கூடும்.
AI இயந்திரங்களை புத்திசாலியாக மாற்றுகிறது. ஆனால் அதைவிட முக்கியமாக அது மனித நோக்கங்களை பல மடங்கு வலுப்படுத்தும் சக்தியாகும் என்பதில் சந்தேகம் இல்லை.
AI இயந்திர மையமாக அல்ல, மனித மையமாக மாற்றுவது மிக அவசியமாகும்.
இந்த மாநாட்டில் ‘சர்வஜன ஹிதாய, சர்வஜன சுகாய'(அனைவருக்கும் நன்மை, அனைவருக்கும் மகிழ்ச்சி) என்ற கொள்கையின் அடிப்படையில் மனித நலனை உலகளாவிய AI உரையாடலின் மையமாக வைத்தோம்.
தொழில்நுட்பம் மனிதர்களுக்கு சேவை செய்ய வேண்டும், மனிதர்கள் தொழில்நுட்பத்திற்கு அல்ல-இது எனது நிலையான நம்பிக்கை.
UPI மூலம் டிஜிட்டல் கட்டணங்கள் அல்லது COVID வளங்கள் போன்ற முயற்சிகளில் டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு அனைவரையும் சென்றடையுமாறு நாங்கள் உறுதி செய்துள்ளோம்.
இதை உணர்வை இந்த மாநாட்டில் காண முடிந்தது. விவசாயம், பாதுகாப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி மற்றும் பல மொழி பயனாளர்களுக்கான கருவிகள் போன்ற துறைகளில் நமது புதுமை கண்டுபிடிப்பாளர்களின் பணியில் அது பிரதிபலித்தது.
இந்தியாவில் AI மனிதர்களை வலுப்படுத்தும் திறனை காட்டும் உதாரணங்கள் ஏற்கனவே உள்ளன. சமீபத்தில் இந்திய பால் கூட்டுறவு AMUL அறிமுகப்படுத்திய ‘Sarlaben’ என்ற AI இயக்கப்படும் டிஜிட்டல் உதவியாளர், 3.6 மில்லியன் பால் வள விவசாயிகளுக்கு-பெரும்பாலும் பெண்களுக்கு கால்நடை ஆரோக்கியம் மற்றும் உற்பத்தி பற்றிய உடனடி வழிகாட்டுதலை அவர்களின் சொந்த மொழியில் வழங்குகிறது.


இதே போல் ‘Bharat VISTAAR’ என்ற AI தளம், வானிலை முதல் சந்தை விலைகள் வரை விவசாயிகளுக்கு பழமொழி தகவல்களை வழங்கி அவர்களை வலுப்படுத்தி வருகிறது.
மனிதர்கள் இயந்திரங்களுக்கான தரவு புள்ளிகளாக மட்டுமே மாறக்கூடாது. அதற்கு பதிலாக AI உலக நன்மைக்கான கருவியாக இருந்து, Global South நாடுகளுக்கு முன்னேற்றத்தின் புதிய வாயில்களை திறக்க வேண்டும்.
இந்த நோக்கத்தை செயல்படுத்த, மனித மைய AI நிர்வாகத்திற்கான MANAV கட்டமைப்பை இந்தியா முன் வைத்துள்ளது.
M-நெறிமுறைகள் மற்றும் ஒழுக்க அமைப்புகள்:
AI நெறிமுறைகளின் அடிப்படையில் இயங்க வேண்டும்.
A-பொறுப்பான நிர்வாகம்: வெளிப்படையான விதிமுறைகள் மற்றும் வலுவான கண்காணிப்பு.
N-தேசிய இறையாண்மை: தரவு மீதான தேசிய உரிமைகளை மதித்தல்.
A-அணுகக்கூடிய மற்றும் உள்ளடக்கிய:AI ஒரே குழுவின் ஆதிக்கமாக இருக்கக் கூடாது.
V-சட்டபூர்வமும் சரிபார்கத்தக்கதும்:
AI சட்டங்களைப் பின்பற்றி சரி பார்க்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

‘மனிதன்’ என்று பொருள் தரும் MANAV, 21ம் நூற்றாண்டில் AI மனித மதிப்புகளுடன் இணைந்து செயல்பட வழிகாட்டும் கொள்கைகளை வழங்குகிறது.
நம்பிக்கையே AI-யின் எதிர்காலத்தை தாங்கும் அடித்தளம். உருவாக்கும் அமைப்புகள் உலகத்தை உள்ளடக்கங்களால் நிரப்பும் நிலையில்,deepfake மற்றும் தவறான தகவல்களால் ஜனநாயக சமூகங்கள் ஆபத்துகளை இது நோக்குகின்றனர். உணவுப் பொருட்களுக்கு ஊட்டச்சத்து லேபிள்கள் இருப்பது போல், டிஜிட்டல் உள்ள அடக்கங்களுக்கும் உண்மை தன்மை குறிச் செயல்கள் இருக்க வேண்டும். நீர் முத்திரை மற்றும் மூல சரிபார்ப்பு தரநிலைகளை உருவாக்க உலக சமூகமே ஒன்றிணை வேண்டும் என நான் வேண்டுகிறேன்.


இந்தியா ஏற்கனவே செயற்கையாக உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களுக்கு தெளிவான லேபிள் கட்டாயம் என்ற சட்ட நடவடிக்கையை எடுத்துள்ளது.
நமது குழந்தைகளின் நலன் எப்போதும் நம் இதயத்துக்கு நெருக்கமானது. செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகள் பொறுப்புணர்வுடன் குடும்ப வழிகாட்டுதலுடன் பயன்படுத்தமாறு பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட வேண்டும். உலகளாவிய கல்வி அமைப்புகளில் நாம் கொண்டுள்ள அக்கரையை போலவே இந்த அணுகுமுறையும் பிரதிபலிக்க வேண்டும்.
மனிதர்களும் புத்திசாலி அமைப்புகளும் இணைந்து உருவாக்கும், இணைந்து பணிபுரியும் மற்றும் இணைந்து வளர்ச்சி அடையும் புதிய காலத்திற்குள் நாம் நுழைகிறோம். முற்றிலும் புதிய தொழில்கள் உருவாகும். இதயம் தொடங்கிய போது அதன் வாய்ப்புகளை யாரும் முழுமையாக கற்பனை செய்யவில்லை.
அது எண்ணற்ற புதிய வாய்ப்புகளை உருவாக்கியது. அதைப்போலவே AI-யும் பெரும் வாய்ப்புகளை உருவாக்கும்.
இந்தியாவின் பல்வகைமை, ஜனநாயகம் மற்றும் மக்கள் தொகை இயக்கம் ஆகியவை உள்ளடக்கிய புதுமைக்கான சிறந்த சூழலை வழங்குகின்றன. இந்தியாவில் வெற்றி பெறும் தீர்வுகள் உலக மனித குலத்திற்கு சேவை செய்யக்கூடியவை.
அதனால் தான் உலகிற்கு நாங்கள் விடுக்கும் அழைப்பு.
இந்தியாவில் வடிவமைக்கவும், உருவாக்குவோம் மனித குலத்திற்கு சேவை செய்யும்.

நரேந்திர மோடி
இந்திய பிரதமர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular