Thursday, March 12, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

சட்ட நடைமுறைக்கு மதிப்பளியுங்கள்-ஆருடம் கூற வேண்டாம்!

தனது மாநில அரசாங்க ஆட்சி குழு உறுப்பினர் மீதான நீதிமன்ற விசாரணையில் சட்ட நடைமுறைக்கு திரங்கானு அரசாங்கம் முழுமையான மதிப்பை வழங்குவதாக திரங்கானு மந்திரி பெசார் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் சாம்சுரி மொக்தார் கூறினார்.
மாநில ஆட்சி குழு உறுப்பினர் ஒருவர் சம்பந்தப்பட்ட இந்த நீதிமன்ற விசாரணையை சட்ட நடைமுறைக்கு விட்டு விட வேண்டும். இது குறித்து முன்கூட்டியே மதிப்பீடு செய்யக்கூடாது என்றார் அவர்.
ஒருவர் நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதியே என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கி உள்ள சம்பந்தப்பட்ட ஆட்சி குழு உறுப்பினர் தற்போதைய நிலையில் தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை என அவர் சுட்டிக் காட்டினார்.
ஆட்சி குழு உறுப்பினர் என்ற நிலையில்லான இவரது பணி நீதிமன்ற விசாரணை நடைமுறையை பாதிக்காது என அவர் தெரிவித்தார்.
நேற்று காலையில் திரங்கானு மாநில அரசாங்க கிராமப்புற மேம்பாட்டு குழுவிற்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஹனாபியா மாட் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்த்து நீதிமன்றத்தில் விசாரணை கூறினார்.
கடந்த 6 மற்றும் 8 ஆண்டுகளுக்கு முன்னர் தமது இரண்டு மகன்களுக்கு அரசு சார்பு நிறுவனங்களில் பணிக்கு அமர்த்தியதாக இவர் எதிராக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular