Thursday, March 12, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

அமாட் சாம்சுரியின் நியமனம் நாட்டின் அரசியல் பயணத்தில் வரையறுக்கப்பட்ட அத்தியாயம்!

பெரிக்காத்தான் நேஷனல் எதிர்க்கட்சி கூட்டணியின் தலைவராக திரங்கானு மந்திரி பெசார் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் சாம்சுரியின் நியமனம் நமது நாட்டின் அரசியல் பயணத்தில் வரையறுக்கப்பட்ட அத்தியாயம் என பாஸ் ஆதரவு பேரவையின் தகவல் பிரிவு தலைவர் டாக்டர் பாலச்சந்திரன் கோபாலகிருஷ்ணன் கூறினார்.
டாக்டர் அமாட் சாம்சுரியின் தலைமைத்துவ ஆற்றலை திரங்கானு மாநில மக்கள் நேரடியாக கண்டு உணர்ந்துள்ளதாக அவர் சொன்னார்.
மாநில அளவிலான இவரின் தலைமைத்துவ ஆற்றல் தேசிய அளவில் கொண்டு செல்ல தயாராகி விட்டதாக திரங்கானு மந்திரி பெசாரின் மலாய்காரர்கள் அல்லாதவர்களின் சிறப்பு அதிகாரிமான அவர் சொன்னார்.
இவரின் இந்த நியமனம் மலேசிய அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் என்றார் அவர்.
டாக்டர் அமாட் சாம்சுரியின் இந்த பயணத்தில் தாமும் இடம் பெற்றுள்ளது தமக்கு கிடைத்த பாக்கியம் என அவர் சுட்டிக் காட்டினார்.
டாக்டர் அமாட் சாம்சுரியின் ஆற்றல், தூரநோக்கு சிந்தனை மலேசியர்களை முன்னோக்கி கொண்டு செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை என அவர் குறிப்பிட்டார் .
மலேசிய அரசியல் வரலாற்றில் இந்த மாற்றம் இப்பொழுது தொடங்கி விட்டது என அவர் தெரிவித்தார்.
மலேசிய மக்களுக்கு டாக்டர் அமாட் சாம்சுரி சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவார் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular