
தாய்லாந்து, பேங்காக்கில் நடைபெற்ற 2025 தென்கிழக்காசியா
(சீ) விளையாட்டுப் போட்டியில் நாட்டிற்கு தங்கத்தை பெற்றுத் தந்த தேசிய பூப்பந்து இரட்டையர் அணியின் பெர்லி டான் மற்றும் எம்.தீனா ஜோடிக்கு தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
இந்த தங்கப் பதக்கத்திற்கு நாடு நீண்ட காலம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.
இறுதியில் நமது தேசிய இரட்டையர் அணியான பெர்லி டான் மற்றும் எம்.தீனா தங்கப் பதக்கத்தை வென்று நாட்டிற்கு பெருமையை சேர்த்து தந்துள்ளதாக சரஸ்வதி குறிப்பிட்டார்.
உலகின் முதல் நிலை பெண் இரட்டையர் பூப்பந்து ஜோடியான இவ்விருவரும் இதுவரை பல போட்டிகளில் தங்கம் பெற்று நாட்டிற்கு பெருமையை அள்ளித் தந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த சீ போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ள நாட்டின் இதர போட்டியாளர்களுக்கும் இவ்வேளையில் தமது வாழ்த்துக்களை தாம் தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.


