Wednesday, April 29, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

மனிதவள அமைச்சராக ரமணன், தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சராக யுனேஸ்வரன் நியமனம்!

பிகேஆர் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் மனிதவள அமைச்சராகவும் மற்றும் பிகேஆர் கட்சியின் செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் ராமராஜ் தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சராகவும் நியமனம் செய்யப்பட்டனர்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தமது புதிய மடானி அமைச்சரவையை அறிவித்தார்.
பிரதமரின் முதலாவது அமைச்சரவையில் டத்தோஸ்ரீ ரமணன் தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணையமைச்சராக பதவி வகித்து வந்துள்ளார்.
பிரதமரின் இந்த புதிய அமைச்சரவையில் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த ஹானா இயோ கூட்டரசு பிரதேச அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சராக அம்னோவின் ஜொஹாரி அப்துல் கானி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பிரதமரின் இந்த அமைச்சரவை பட்டியலில் தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சராக பதவி வகித்து வந்த செனட்டர் சரஸ்வதி கந்தசாமி இடம் பெறவில்லை.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular