
தொழில் அதிபரும் சமூக ஆர்வலருமான டத்தோ ஷர்மிளா ஷா ஜெயராஜ் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் தலைநகரில் உள்ள பிரபல விடுதி ஒன்றில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த கொண்டாட்டத்தில் டத்தோ ஷர்மிளாவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
இவரின் இந்த இனிய பிறந்தநாள் விழா கொண்டாட்டம் சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.
டத்தோ ஷர்மிளாவின் வளர்ச்சி இந்நாட்டில் உள்ள பெண்மணிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு என்பது குறிப்பிடத்தக்கது.
அலை ஓசை ஊடகம் சார்பாக மலேசிய மக்கள் மறுவாழ்வு சங்கத்தின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ அழகேசு டத்தோ ஷாமிளாவிற்கு தமது பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார்.


