
தென் கொரியாவின் தலைநகரான சியோலில் உள்ள சியோங்ஜூ நகரில் நடைபெற்ற HWPL உலக அமைதி உச்ச நிலை மாநாட்டில் உலக அமைதிக்கான பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.
உலக அமைதிக்காக தென் கொரியாவை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் HWPL இயக்கம், கடந்த 11 ஆண்டுகளாக இந்த உலகளாவிய மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.
இந்த உச்ச நிலை மாநாடு இம்முறை சியோல் நகரில் உள்ள சியோங்ஜூ நகரில் செப் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.
HWPL இயக்கத்தின் அயராத உழைப்பினால் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த மாநாட்டில் இம்முறை 800க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த உச்ச நிலை மாநாட்டில் அரசாங்கங்கள், இயக்கங்கள் மற்றும் அரசு சார்பற்ற அமைப்புகளின் பங்களிப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன.

உலக அமைதிக்காக DPCW எனும் அனைத்துலக சட்டத்தை ஐநா சபைக்கு கொண்டு செல்ல HWPL இயக்கத்தின் அயராத உழைப்பு குறித்து இந்த மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
அமைதிக்கான கல்வி குறித்து இந்த மாநாட்டில் விரிவாக பேசப்பட்டது.
HWPL அமைதி கல்விக்கான பாடத்திட்டம் ஜாம்பியா கல்வி அமைச்சுமுன்னெடுத்துள்ளதாக இந்த மாநாட்டில் கூறப்பட்டது.

இந்தப் பாடத்திட்டம் ஜாம்பியா நாட்டில் தேசிய அளவில் அறிமுகப்படுத்தப்படும் என அந்நாட்டின் உயர் நிலை அதிகாரி ஒருவர் கூறினார்.
கடந்த 2023ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட அனைத்துலக அமைதி அகடமி உலக அமைதிக்காக பல்வேறு திட்டங்களை அமலாக்கம் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
உலக அமைதிக்காக உலகளாவிய ஒத்துழைப்பு மிக அவசியம் என இந்த உச்ச நிலை மாநாட்டில் அவர் வலியுறுத்தினார்.
போர் கைவிடுதல், அமைதிக்கான திட்டங்கள் இவை அனைத்தும் இந்த மாநாட்டில் விரைவாக பேசப்பட்டது.


