Saturday, November 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img

ஆப்பிரிக்க நாட்டில் சிறைக் கலவரத்தை பயன்படுத்தி 130 கைதிகள் தப்பி ஓட்டம்!

மத்திய ஆப்பிரிக்க நாடான சாட்டின் மோங்கோ நகரத்தில் சிறைச்சாலை அமைந்துள்ளது. அங்கு தண்டனை கைதிகள் உள்பட சுமார் 500 கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையே அங்குள்ள கைதிகள் தங்களுக்கு போதிய உணவு வழங்கப்படுவதில்லை என குற்றம்சாட்டி வந்தனர். ஆனால் அதிகாரிகள் அதனை கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் குவேரா மாகாண கவர்னர் மோங்கோ சிறைச்சாலையை பார்வையிட சென்றிருந்தார். அப்போது சிறை நிர்வாகத்தைக் கண்டித்து கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த சமயத்தில் சில கைதிகள் காவலர்களின் அறைக்குள் நுழைந்தனர். பின்னர் அங்கிருந்த துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தனர். இதனால் அங்கு கலவரம் வெடித்தது.

இந்த கலவரத்தில் 3 பேர் பலியாகினர். கவர்னர் உள்பட பலருக்கு படுகாயம் ஏற்பட்டது. இந்த நெருக்கடியான சூழலை பயன்படுத்தி 130-க்கும் மேற்பட்ட கைதிகள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular