Friday, April 17, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

உள்ளூர் சமூகத்தை இணைக்க செபு மையத்தை விரிவாக்க ஏர் ஆசியா திட்டம்!

பிலிப்பைன்ஸின் செபு நகருக்கு மீண்டும் விமான சேவையை தொடங்குவதை தொடர்ந்து, உள்ளூர் சமூகங்களை இணைக்க செபு மையத்தை விரிவாக்க ஏர் ஆசியா திட்டம் கொண்டுள்ளது.
செபு நகரை புதிய அனைத்துலக நுழைவாயலாக உருமாற்றம் செய்ய உலகின் தலைசிறந்த மலிவு கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் அனைத்துலக வழித்தடங்களின் வழி விஸாயாஸ் மற்றும் மைண்டானோவாவில் உள்ள சமூகங்களை ஆசியானுடன் இணைக்க ஏர் ஆசியா நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
எதிர் வரும் 15 நவம்பர் முதல் செபு-தாவோ(வாரத்திற்கு 18 முறை),செபு-கேட்டிக்லான்(வாரத்திற்கு 11 முறை) மற்றும் செபு-லில்லோ(வாரத்திற்கு 4 முறை) விமான சேவைகளை ஏர் ஆசியா தொடங்குகிறது.
செபு-கோலாலம்பூர்(வாரத்திற்கு 14 முறை) விமான சேவையை தொடங்கியது தொடர்ந்து, இந்த புதிய வழிதடங்கள் ஏதுவாக அமைகிறது.
அதேவேளையில் செபு-மக்காவ் நகருக்கு வாரத்திற்கு 3 விமான சேவைகளை ஏர் ஆசியா மேற்கொள்கிறது.
இதனிடையே பிலிப்பைன்ஸில் நமது அடுத்த கட்ட வளர்ச்சியில் செபு ஒரு மூலக்கல் என ஏர் ஆசியா குழும நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி அமான்டா வூ கூறினார்.


உள்ளூர் சமூகங்களை இணைக்க ஏர் ஆசியா முன்னுரிமை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
ஆசியானில் வலிமையாக கால் பதிக்க செபு மையத்தை விரிவாக்கம் செய்ய ஏர் ஆசியா அதிக கவனம் செலுத்தி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
லட்சக்கணக்கான பயணிகளுக்கு மலிவான கட்டணத்தில் சிறகடிக்க ஏர் ஆசியா முக்கிய பங்காற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.
செபுவிலிருந்து இன்னும் பல அனைத்துலக நகர்களுக்கு சிறகடிக்க ஏர் ஆசியா திட்டம் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
செபுவிலிருந்து அனைத்துலக நகர்களுக்கு ஏர் ஆசியா சிறகடிப்பதால் மத்திய விஸாயாஸ் பயணிகளுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு என்றார் அவர்.
இதனிடையே இந்த புதிய விமான சேவைகளால் உள்ளூர் மக்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என ஏர் ஆசியா பிலிப்பைன்ஸ் தலைவர் மற்றும் தலைமை செயல்முறை அதிகாரி சுரேஷ் பங்கா கூறினார்.
மேலும் சுற்றுலாத்துறை மற்றும் வர்த்தக வாய்ப்புகள் அதிகரிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular